சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் உள்ள சாந்தி தியேட்டர் அருகே டாஸ்மாக் மதுபான கடையில் குடிப்பகமும் உள்ளது. இரவு நேரங்களில் டாஸ்மாக் மதுபான கடை பூட்டிய பிறகு அருகாமையில் உள்ள பாரில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மது பாரில் விடிய விடிய மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இரவு முழுவதும் மது விற்பனை செய்யப்பட்ட பிறகு இன்று காலையிலும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த பாரை குடிமகன்களுடன் பூட்டு போட்டு காவல் துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அருகாமையிலேயே காவல் நிலையம் இருந்தும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதை காவல்துறையினர் தடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.



மது விற்பனை செய்யும் நபர்கள் மீது காவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவம் இடம் வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை எடுத்து போராட்டம் கைவிடப்பட்டது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் பாரை திறந்தவுடன் உள்ளே இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள பல்வேறு டாஸ்மாக் மதுபான கடைகள் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண