தருமபுரியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவரின் மனைவி மீது காசோலை கொடுத்து 5 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அடுத்த பிடமனேரி பகுதியைச் சேர்ந்த தனம் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் ஆனந்த கிருஷ்ணன் மனைவி ஸ்ரீதேவிக்கு காசோலை பெற்றுக் கொண்டு 5 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடனாக பெற்ற பணத்தை ஸ்ரீதேவி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்த தனம், ஸ்ரீதேவி மீது காசோலை மோசடி செய்ததாக தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனத்திற்கு 5 லட்சம் ரூபாய் திரும்பி கொடுக்க வேண்டும், மீறினால் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருந்த ஸ்ரீதேவியை பிடிக்க, பிடி வாரண்ட் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தருமபுரி நகர காவல் துறையினர், பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவர் மனைவி என்பதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கபட்ட தனம் இன்று நகர காவல் நிலையம் மற்றும் ஸ்ரீதேவி மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு வழங்க வேண்டிய பணத்தை பெற்று தரும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
காரிமங்கலம் வாரச் சந்தையில், தேங்காய் வரத்து மற்றும் விலை குறைவு-80 ஆயிரம் தேங்காய் ரூ.10.75 இலட்சத்திற்கு விற்பனை.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் சந்தைக்கு, தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்களை, தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், முதல் ரக தேங்காய், 11 முதல், 18 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 15 முதல், 22 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் இன்றைய வாரச் சந்தைக்கு தேங்காய் வரத்து, கடந்த வார்ததை விட அதிகரித்தது. இன்றைய காரிமங்கலம் வாரச் சந்தைக்கு தேங்காய் வரத்து குறைந்து, 80 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்றைய சந்தையில், முதல் ரக தேங்காய், 10 முதல், 16 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 6 முதல் 12 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த தேங்காய்களை மாலுார், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இன்று 80 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அவை முழுவதும் விற்பனையானதில் மொத்தம் 10.75 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த வாரத்தை விட தேங்காய் வரத்தும், விலையும் குறைந்தது. இதனால் கடந்த வாரம் ஒரு இலட்சம் தேங்காய் ரூ.15.50 இலட்சத்திற்கு விற்பனையானது. ஆனால் இன்று 20 ஆயிரம் தேங்காய் குறைந்ததால், ரூ.5 இலட்சம் குறைந்து ரூ.10.75 இலட்சத்திற்கு விற்பனையானது. இந்த விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.