தருமபுரி அருகே உள்ள தனியார் செவிலியர்  கல்லூரியில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டியில், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை  காவல் ஆய்வாளர் ரங்கசாமி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

மேலும் கடந்த சில ஆண்டுகளாக அதியமான் கோட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரங்கசாமி மாணவர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், மது பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகளை கல்லூரி மாணவ மாணவிகளை வைத்து நடத்தியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது காவல் ஆய்வாளர், தற்போது டிஎஸ்பி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளதால், கல்லூரி மாணவ, மாணவிகள் காவல் ஆய்வாளர் ரங்கசாமி உருவம் பொறித்த கேக்கினை வெட்டி, தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து இன்ப ரொம்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் காவல் ஆய்வாளர் மனம் நெகிழ்ந்து மாணவ மாணவிகளுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.

 

----------------------------------------


2023 புத்தாண்டை வரவேற்கும் விரதமாக தருமபுரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை சிறப்பு திருப்பலி- ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு.

 

2022 ஆம் ஆண்டு முடிந்து 23ஆம் ஆண்டு தொடங்க உள்ள ஆங்கில புத்தாண்டு தினத்தை நாடு முழுவதும் மிக விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி புனித தேவாலயங்கள், திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு  சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஆங்கில புத்தாண்டு 2023 வரவேற்கும் வகையில் தருமபுரி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் கிருஸ்தவ பாடல்களை பாடி சிறப்பு வழிபாடு செய்து  புத்தாண்டை வரவேற்றனர்.



மேலும் புத்தாண்டு கொண்டாட திருப்பலியில் கலந்து கொண்டவர்களுக்கு குருமார்கள் அப்பம் வழங்கி ஆசிர்வாதம் செய்தனர். இந்த புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நாடும், நாட்டு மக்களும் செல்வ செழிபாடு வாழ வேண்டும் என வழிபாடு செய்து, ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.