சேலம் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டம் நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் குவித்தனர். பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களுக்கு ஒரே நாளில் ஆய்வு செய்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மாநகராட்சி ஆணையாளர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
சேலம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கவுன்சிலர் மற்றும் மேயர் நீண்ட நாட்களாக இல்லாத காரணத்தினால், சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டத்தை சமாளிக்கவும் உடனடியாக மாநகராட்சி பிரச்சனைகளை தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ், இன்று பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை நேரடியாக அந்தந்த பகுதி சென்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் மாறும் அடுத்த திங்கட்கிழமை குறைதீர் கூட்டம் நடைபெறுவதற்கு முன், கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை குறித்து விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகிகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். மாநகராட்சி பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி நிர்வாக அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களின் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது.