முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் மகள் திருமண விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையேற்று மணமக்கள் நர்மதா - கௌதம் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செயல்படுத்தாமல் தன்மீது உள்ள தவறை மறைக்க கடந்த அதிமுக அரசு மீது குறை சொல்லக் கூடாது என்றார். உரிய ஆதாரம் இன்றி கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்ற அண்ணாமலை, தொடர்புடைய அரசு அதிகாரிகள் விசாரணை செய்து தெரிவிக்கவும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார். தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரைடுகள் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலையை கொண்டு வந்தால் நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு கீழ் வரும் என்றார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும்போது அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடுவதை தவிர்த்தாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் என்ற அவர் அமைச்சர்களின் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே காவல்துறையை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார். வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மக்களை திசை திருப்புவதற்காகவே திமுக அரசு தற்போது தமிழ் புத்தாண்டு தேதியை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
வேலூர்: கானாற்றில் வடியாத வெள்ளம் - தற்காலிக பாலம் அமைத்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதிய வகை ஒமைக்ரான் கொரோனா உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் வகையில் மாறுபட்டாலும் பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றுதான் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு வழக்கமான பாதுகாப்பு நடவடிபழக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டால் கொரோனா வார்டில் சிகிச்சை இல்லை - மா.சுப்பிரமணியன்