சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா உள்ளது. இதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பூங்கா முழுவதும் வனத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சென்று சுற்றி பார்த்து வேறு என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என கேட்டறிந்தார்.



பின்னர் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பகுதிகளை அதிகப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார். சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் பூங்காக்களில் உயர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ. 2 கோடி 50 லட்சம் நாற்றுகள் நடப்பட உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் நாற்றுகள் நடப்பட பணிகள் நடக்கிறது. இந்தப் பணிகளை ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறேன். இதுபோல சேலம் குருவம்பட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவிலும் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தேன். இது போன்ற பூங்காக்கள் பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகள் கல்வி அறிவு பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் ரூபாய் எட்டு கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்த பூங்காவில் இல்லாத புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகளையும், கொண்டு வந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இதற்காக இந்த வனப்பகுதி 133 எக்டேர் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்தப் பூங்காவை 87 ஆயிரம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். அப்போது கொரோனா காலம் தற்போது ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் சுற்றிப் பார்த்துள்ளனர் என்று கூறினார். பூங்காவை சுற்றி பார்க்க பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாகும். இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் புலி மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் யானைகள் சாலைகளுக்கு வருவதை தடுக்க அகழிகள் வெட்டி பாதுகாப்பு தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சோழர் கம்பி வேலிகளும் அமைக்கப்பட உள்ளது. வனப் பகுதியில் சாலைகள் அமைக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வி கற்கவும், அவர்களை படிக்க வைக்கவும் வனத்துறை அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்று பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகளின் படிப்பு மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் சேலம் நகரில் இருந்து பேருந்து வசதி அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதியளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண