தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து பேசும்போது, இதுபோன்ற அத்துமீறல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை பாயும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தருமபுரியில் பேட்டியளித்துள்ளார்
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். இதனையடுத்து நல்லம்பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன்,
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 88 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 85,000 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். மேலும் என்னும் சில வாரங்களில் ஒரு கோடியை எட்டவுள்ளது. இந்த திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தினை நான் செல்லும் இடங்களில் எல்லாம் கிராமங்களில் வீடு, வீடாக சென்று, மருந்துகள் முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறேன்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த மாதம் கல்லூரி பேராசிரியர் சதீஷ்குமார், தொடர்ந்து அத்து மீறுவதாக மீது புகார் அளித்தார். கடந்த 23ஆம் தேதி பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பேராசிரியை கண்மணி, பேராசிரியர் தண்டர்ஷிப், மருத்துவர் காந்தி கொண்ட குழுவினர், மாணவிகள் மற்றும் சதீஷ்குமாரிடம் தனித்தனியாக விசாரித்து, எழுத்து பூர்வமாக வாங்கி கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த விசாரணையில் மாணவிகள் சொன்ன புகார்களை, பேராசிரியர் சதீஸ்குமார் முற்றிலும் மறுத்திருந்தார். இதில் அ சதீஷ்குமாரின் அத்துமிரல் தொடர்பான தொடர்பான புகார்களை தெரிவித்து இருந்தனர். இது குறித்து 15 நாள் கால அவகாசத்துடன் சதீஷ்குமாருக்கு விளக்கம் கேட்டு கடிதம் துறையின் சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் சதீஷ்குமார் 15 நாட்கள் தேவையில்லை உடனடியாக தருகிறேன் என கேள்விக்கு மறுத்து கடிதத்தை தந்தார். இதில் மாணவி கொடுத்த புகாரை விசாரணை நடத்தியவர்களின் அறிக்கையும் ஒன்றாக இருப்பதால் மருத்துவர் சதீஷ்குமார் தவறு இழைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது.
இதனை தொடர்ந்து அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் தற்காலிக பணியை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிக பணியிடை நீக்கத்திற்கு பிறகு துறை ரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும். மருத்துவர் பணி என்பது மக்களை காக்கும் மகத்தான பணி இப்பணியில் தவறான காரியங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.