சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் ஆதிதிராவிடர் துறை நலக்கோரிக்கை நிதிநிலை அறிக்கை பட்ஜெட் தனியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாக கூறினர். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை வேளாண் துறைக்கு 2 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக மின்சார வாரியத்திற்கு தனி பட்ஜெட் போடப்பட்டு வந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெற்று வரும் நிலையில் திராவிடர் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் ஆதிராவிடர் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது, உள்ளிட்டவைகள் விவாதிக்கப்படலாம் என்றார்.
உடனடியாக செய்ய முடியாவிட்டாலும் தாட்கோவிற்கு தனி வங்கி கொடுக்க வேண்டும். ஒரு வங்கியில் ஆதிதிராவிட கடன் வாங்க சென்ற அனைத்து வங்கிகளிலும் கடன் வாங்கவில்லை என்று சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் அகதிகளுக்காக தமிழகத்தில் உருவாக்கி செயல்படுகிறது. அது மட்டும் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். தாட்கோவிற்கு தனி வங்கி வேண்டும். அதை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தியாவில் சாதிய, ஆணவ, மேல்அதிகாரம் அதிக வன்கொடுமைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் வரிசையில் நான்காம் ஐந்தாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இது தொடர்பாக வழக்குகள் பதியப்படவில்லை. இதற்கான தீர்வுகள் கிடைக்கப்படுவதில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஆதிதிராவிடர் துறைக்கு தனி பட்ஜெட் மற்றும் தாட்கோ தனி வங்கி ஆகியவை மட்டுமே தீர்வாக இருக்கும். தமிழகத்தில் ஆதி திராவிட பள்ளிகளில் சரியாக நிதி ஒதுக்குவதுமில்லை. உணவு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு வைத்தார். மும்மொழி கொள்கையில் பாதிக்கப்பட்டுள்ளது அடித்தட்டு மக்கள் தான்;ஆதிதிராவிடர் பள்ளி, மாநகராட்சி பள்ளி ஆகியவற்றில் படிப்பவர்கள்தான். இந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கு இது உண்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் மக்களின் பிரச்சினைகள் மனிதாபிமானத்துடன் அணுகப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதுவரை ஆதிதிராவிட துறையில் தாசில்தார் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூட வாகனங்கள் இல்லை; ஆய்வு செய்வதற்கு ஏன் வருவதில்லை என்று மக்களுக்கு கேள்வி கேட்டால் வாகனங்கள் இல்லை என்று தெரிவிப்பதாக கூறுகிறார்.
அந்த அளவிற்கு ஆதிதிராவிட துறையில் பிரச்சினைகள் நிறைந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்பது அடித்தட்டு மக்களுக்கு தான் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே 50 ஆண்டுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்தும் மாநிலத்தின் பிரச்சினைகளை தமிழக முதலமைச்சர் பேசுகிறார் அது வரவேற்கத்தக்கது. தேர்தலில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு இருப்பதாக கூறினார். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆதிதிராவிடர் மக்களின், மக்கள்தொகை உயர்வதற்கு ஏற்ப தொகுதி உயர்த்தப்பட வேண்டும் ஆனால் உயர்த்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். திமுக சமூகநீதி பேசிக்கொண்டு, ஆதிதிராவிட மக்களுக்கு சமூக அநீதி இழைத்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நலம் சார்ந்த அரசாக இல்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது.1931 முதல் இதுவரை ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பல மாநிலங்களில் முறையான ஜாதி வாரி கணக்கெடுப்பு நநடத்தப்படவில்லை. தோராயமான மதிப்பீடு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 90 சதவீதம் ஜாதி வாரி கணக்கெடுப்பு பூர்த்தி செய்யவே இரண்டு ஆண்டுகளும், குறைந்தபட்சம் 5,000 கோடி ரூபாயும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தேவைப்படும் என்றார். என்ன நோக்கத்திற்காக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 4900 ஜாதிகள் அங்கீகரிக்கப்பட்ட ஜாதிகள் மட்டுமே உள்ளது. அங்கீகரிக்கப்படாத ஜாதிகள் 6000க்கு மேல் உள்ளது. அவ்வாறு நடத்தினால் பல ஜாதிகளும், ஜாதி மோதல்களும் ஏற்படும் என்றும் கூறினார். நோக்கத்தை தெளிவுபடுத்தாத வரையிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவையற்றது என்றும் தெரிவித்தார்.