சேலம் கடைவீதி பகுதியில் செயல்பட்டு வந்த வஉசி மார்க்கெட்டில் பூக்கள், காய்கறிகள், பழங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யும் 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தது. இந்தப் பகுதியை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த கடைகள் அனைத்தும் சேலம் பழைய பேருந்து நிலையம் வளாகத்திற்குள் தற்காலிக கடைகள் அமைத்துக் கொள்ள மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் வியாபாரிகளுக்கு அங்கு கடைகள் ஒதுக்கப்படுவதற்கு முன்னரே தற்காலிக வஉசி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்காலிக கடை உள்ள பகுதியில் ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதால் இந்த கட்டுமான பணிகளை வரும் 11 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட உள்ளார். 



அதன் காரணமாக தற்காலிக வஉசி மார்க்கெட்டை காலி செய்யுமாறு கூறி இன்றைய தினம் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அங்கு வந்து கடைகளை அப்புறப்படுத்த முயன்றதால் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து அதிகாரிகள் தங்களது முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாநகராட்சி வணிகவளாக பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கும் என்றும் புதிய வ.உ.சி மார்க்கெட் கட்டுமான பணிகள் முடிவடைந்த பின்னர் அங்கு தங்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்ட பின்னரே இங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண