Salem Power Cut 25.11.2025 : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 25-11-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

அஸ்தம்பட்டி துணை மின்நிலையம் பராமரிப்பு

  • அஸ்தம்பட்டி
  • காந்தி ரோடு
  • வின்சென்ட்
  • மரவனேரி
  • மணக்காடு
  • சின்ன திருப்பதி
  • ராமநாதபுரம்
  • கன்னங்குறிச்சி
  • புது ஏரி
  • ஹவுசிங் போர்டு
  • கொல்லப்பட்டி
  • கொண்டப்ப நாயக்கன்பட்டி
  • கோரிமேடு
  • ராமகிருஷ்ணா ரோடு
  • அழகாபுரம்
  • ராஜாராம் நகர்
  • சங்கர் நகர்
  • 4 ரோடு
  • மிட்டா பெரிய புதுார்
  • சாரதா கல்லுாரி ரோடு
  • செட்டிச்சாவடி
  • விநாயகம்பட்டி
  • நகரமலை அடிவாரம்
  • ஏற்காடு

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை