சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பொதுப்பணித்துறைை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் ஒட்டினார். அந்த நோட்டீசில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரான சதாசிவம், "நான் கடந்த மூன்று நாட்களாக வருகை வந்த நிலையில் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் மகாவிஷ்ணு ஆகிய இருவரும் கடந்த மூன்று நாட்களாக அலுவலகம் வராமல் சொந்த வேலையாக அரசு காரை பயன்படுத்திகொண்டு கமிஷன் தொகையை வசூல் செய்வதாக சென்றுவிட்டார்கள். நான் நேரில் வந்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டால் போன் எடுக்கவில்லை, ஆகவே இவர்கள்மீது துறை வாயிலாக எனது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் வரம்புக்கு உட்பட்டு அதிகாரிகள் இருவர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று நோட்டீசில் இடம்பெற்றுள்ளது. இந்த நோட்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் கையெழுத்து அலுவலகம் முன்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், அருள் ஆகிய இருவரிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒட்டப்பட்ட நோட்டீசை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பாமக நிர்வாகி கிழித்துவிட்டனர்.



இதுதொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் சதாசிவம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதலில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறுகையில், ”மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பத்து பள்ளி கட்டிடங்கள் கேட்கப்பட்டது. இரண்டு மட்டுமே வந்திருந்த நிலையில், அதிகாரிகள் கூறியிருந்த மீதமுள்ள நான்கு பள்ளி கட்டிடங்கள் வேண்டுமென்று பொதுப்பணித்துறையிடம் கேட்கப்பட்டது. அதிகாரிகளிடம் கேட்டபோது முதல்வர் நிகழ்ச்சி உள்ளிட்ட அரசுப்பணியில் இருந்த நிலையில் அதிகாரிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே இடைவேளை ஏற்பட்டுவிட்டது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடங்கள் தருவதாக உறுதி அளித்துள்ளனர். தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய பணி, தொகுதி மக்களின் வேலைக்காரர்களாக மாறி, மக்களின் எண்ணஓட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணமாக உள்ளது. அதிகாரிகளுக்கும், எங்களுக்கும் இடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை என்று கூறினார். தற்போது அதிகாரிகளிடம் முறையிட்டதால் நான்கு பள்ளிகளுக்கு 35 வகுப்பறைகள் கூடுதலாக கட்டித்தர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இது ஆன்லைனில் மூலம் டெண்டர் கூறப்படுவதால் இதில் கமிஷன் பெறமுடியாது. ஆன்லைன் மூலம் டெண்டர் விடுப்பதால் இதில் லஞ்சம் வாங்கமுடியாது. அப்படியெல்லாம் இல்லை, சும்மா என்று அருள்” கூறினார்.



இரண்டாவதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பேசுகையில், ”கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தொகுதி பிரச்சினை குதித்து பொதுப்பணித்துறை அதிகாரி சந்திக்க வந்ததாகவும், ஆனால் இரண்டுமுறை சந்திக்க முடியவில்லை, மூன்றாவது முறை கோரிக்கை விடுத்ததாக கூறினர். மேட்டூர், மேச்சேரி, கொளத்தூர், சுகாதாரத்துறை விடுதி கட்டணம் பழுதடைந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கவந்ததாக கூறினார். ஆனால் செவிசாய்க்காத நிலையில் மூன்று முறை வந்தும் அதிகாரி இல்லாத நிலையில், சரியான முறையில் பதிலும் இல்லை, அரசு அதிகாரிகள் முறையான மரியாதை கொடுக்கவில்லை என்று கேட்டதாகவும், அவர்கள் சொன்ன பதிலுக்கு கோபமடைந்ததால் இது மாதிரியான நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.


பொதுப்பணித்துறை கட்டிடங்கள் அதிகளவில் மேட்டூர் தொகுதியில் பழுதடைந்துள்ளது. தொகுதி பிரச்சினை பேசி வரும்போது உரிய நடவடிக்கை, பதில் இல்லாததால் கோபப்பட்டு நோட்டீஸ் ஒட்டியாக கூறினார். தற்பொழுது அதிகாரிகள் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். அரசு அதிகாரி மக்கள் பிரச்சினைக்கு செவி, சாவிக்காததால் கோபமடைந்து நடவடிக்கை எடுத்ததாக கூறினார். தற்பொழுது அதிகாரிகள் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக முன்னுரிமை கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். நோட்டீஸில் அதிகாரிகள் கமிஷன் பெற செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அதிகாரிகள் குறித்து விசாரித்தபோது, முதலில் டெண்டருக்காக சென்றதாக எனக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அதிகாரிகள் குறித்து முழுமையாக விசாரித்த போது ஆய்வு செய்ய சென்றதாக தெரியவந்தது எனவும் கூறினார்.