காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிரிவுகளுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.





காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெயர் வரும் தொடர்மழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 23,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து. வருகிறது நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து தற்பொழுது மேலும் அதிகரித்து வினாடிக்கு 14,000 கனிஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றங்கரை ஒரு பகுதிகளில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.