ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சிறையில் இருந்து வரும் கறி கோழி.. அது எப்படிங்க சார்..!

கோழிகளை மொத்தமாக வாங்க விரும்புவோர்கள் 0427-2403551, 0427-2900048 என்ற எண் அல்லது cpslm.pcsd.gov.in என்ற மின்னஞ்சலிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Continues below advertisement

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் மற்றும் 138 கிளை சிறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சிறைகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு கைதிக்கும் தல 150 கிராம் சிக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கறிக்கோழியை வெளியில் இருந்து வாங்கி  கைதிகளுக்கு சமைத்து வழங்கப்பட்டு வந்தது .

Continues below advertisement

சிறை கோழி பண்ணை:

இந்த நிலையில், சிறை கைதிகளுக்கு தரமான கறிக்கோழிகளை வழங்கும் வகையில் தேவையான கறிக்கோழியை அந்தந்த மத்திய சிறைகளிலேயே வளர்க்க முடிவு செய்தனர். அதன்படி சேலம், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை, சென்னை புழல் உள்பட மத்திய சிறைகளிலும் கோழி பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. கோழி வளர்க்க கைதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் 9 மத்திய சிறைகளிலும் கோழி வளர்ப்பு தொடங்கப்பட்டுள்ளது.

4,500 கோழி குஞ்சுகள் வளர்ப்பு:

இதன் ஒரு பகுதியாக, சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் சேலம் மத்திய சிறையில் 4 ஆயிரத்து 500 கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டன. அந்த கோழி குஞ்சுகள் தற்போது வளர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கு அந்த கோழி கறி வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள கறிகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு விற்பனை:

அதன் பேரில் பொது மக்களுக்கான கறிக்கோழி விற்பனை மையத்தை சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத் திறந்து வைத்தார். வெளியில் ஒரு கிலோ கறி 200 முதல் 250 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் அங்கு 195 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை பொது மக்கள் வாங்கி சென்றனர். மேலும் மொத்தமாக கறிக்கோழி தேவைப்படுவோர் 24 மணி நேரமும் முன் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் சிறையில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 14 சிறை கைதிகளுக்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைன் ஆர்டர்:

இதுகுறித்து சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளனர். இங்குள்ள கைதிகளுக்கு வாரம் தோறும் இரண்டு முறை கோழி கறி ஒருவருக்கு 150 கிராம் விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பு சந்தையில் இருந்து கோழி கறிகள் வாங்கப்பட்டு கைதிகளுக்கு சமைத்து வழங்கப்படும். ஆனால் தற்போது தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஒன்பது மத்திய சிறைகளிலும் கோழிப் பண்ணைகள் அமைத்து அதன் மூலம் வளர்க்கப்பட்ட கோழிகளை கறியாக கைதிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் சேலம் மத்திய சிறையில் கோழிப் பண்ணை அமைக்கப்பட்டு 4,500 கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டது. கோழிக்குஞ்சுகள் வளர்ந்து கறிக் கோழியாக உள்ளது. இந்தக் கோழிகளை மத்திய சிறை மற்றும் கிளைச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு வாரம் இரு முறை உணவுடன் வழங்கப்படுகிறது. கைதிகளின் உணவுக்கு பயன்படுத்தும் கோழிகளை தவிர்த்து மீதம் உள்ள கோழிகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ கறிக்கோழி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோ உயிருடன் கோழி 165 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. கோழிகளை ஆர்டர் செய்து மொத்தமாக வாங்க விரும்புவோர்கள் 0427-2403551, 0427-2900048 என்ற எண் அல்லது cpslm.pcsd.gov.in என்ற மின்னஞ்சலிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம் என கூறினார்.

Continues below advertisement