வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்தப்படும் மக்கள் குறைதீர் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது பிரச்சனையை மாவட்ட ஆட்சியரிடம் கூறி மனு அளித்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த சாம்ராஜா பேட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா ராஜேந்திரன் தம்பதியினர் இவர்களுக்கு சொந்தமான 27 சென்ட் நிலம் ஓமலூர் வட்டம் பாப்பம்பாடி கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த தாரமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் பொட்டு காரன் என்கிற சின்ன கண்ணு அவர்கள் முறைகேடாக ஆவணம் தயாரித்து கடந்த அதிமுக ஆட்சியில் அவரது குடும்பத்தார் பேருக்கு பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் அத்து மீறி உள்ளே நுழைந்து கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு உள்ளனர். இதுகுறித்து கௌசல்யா மற்றும் ராஜேந்திரன் தம்பதியினர் கேட்ட பொழுது அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த காவலர்கள் அதிமுக பிரமுகர்க்கு ஆதரவாக செயல்பட்டு வழக்கை கிடப்பில் போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 27 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்ட அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் மீது நடவடிக்கை எடுத்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். 



இதேபோன்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன், பிரியா தம்பதியர்களுக்கு மிதுன், நவீன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா உயிரிழந்த நிலையில் ஜெகநாதன் பட்டு சரிகை தொழில் செய்துள்ளார்.இந்த நிலையில் தாரமங்கலம் மல்லிகுட்டை பகுதியை சேர்ந்த கோபால் என்பவருடன் ஜெகன்நாதன் இருவரும் இணைந்து தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், ஜெகநாதன் தனியாக தொழிலை பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தனக்கு இரண்டரை லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி, கோபால் என்பவர் அடிக்கடி ஜெகநாதனை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தந்தை பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மகன்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.



இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகநாதன் நேற்று முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காணாமல் போன தந்தையை மீட்டு தரக்கோரி மகன்கள் இருவரும் பள்ளி சீருடையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். ஏற்கனவே தங்களுடைய வீட்டில் வந்து அடியார்களுடன் மிரட்டி செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தையை கண்டுபிடித்து தருமாறு புகார் ஒன்றை எடுத்து வந்திருந்தனர்.