ஆன்லைன் ரம்மி விளையாட்டில், ரூ. 75,000 பணத்தை இழந்த நிலையில் மனமுடைந்த மாணவன் தோட்டத்திற்கு வைத்திருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.


சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் மகன் சூரிய பிரகாஷ் (20). இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 



சூரிய பிரகாஷ் அவரது தந்தை சீனிவாசனின் வங்கி கணக்கில் இருந்து 75,000 ரூபாய் பணத்தை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில், ரூ. 75,000 பணத்தை இழந்த நிலையில் மனமுடைந்த மாணவன் தோட்டத்திற்கு வைத்திருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில் இதனை அறிந்த மாணவரின் பெற்றோர் ஆத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் கோவை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண