சேலத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 492 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 85043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பை எண்ணிக்கை 88205 ஆக உயர்வு. இரண்டாம் நாளாக இன்றும் தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் போடப்படவில்லை. இதுவரை சேலம் மாவட்டத்தில் 7,50,465 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 85% படுக்கைகள் காளியாக உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி பொருத்தவரை அரசு வழங்கிய அனைத்து தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்ட அன்றே மக்களுக்கு செலுத்தப்படுவதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகின்றது. அரசு கூடுதலாக சேலம் மாவட்டத்திற்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பானது இன்று குறைந்துள்ளது. தர்மபுரியில் இன்று புதிதாக 109 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 71 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 103 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்த 109 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1039 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.