கடந்த ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு எடுப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டேம் என்று சேலம் மாவட்ட கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கூட்டம் சேலம் குரங்கு சாவடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட செயலாளர் ராஜா கூறுகையில், கிரசர் ஜல்லி உட்பட அனைத்து கட்டுமான  பொருட்கள் மீது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. கனிமவளத் துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த வாரத்தில் கிரசர் ஜல்லி உரிமையாளர்களை அழைத்து அமைச்சர் பேசினார்.

Continues below advertisement

 

அப்போது அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு 100% ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறினர். பசுமை வரியை பொருத்தவரை சேலம் மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. சேலம் மாவட்ட கிரசர் ஜல்லிகள் அனைத்தும் மாநிலத்திற்கு உள்ளே அனுப்பப்படுகிறது என தெரிவித்தார். டீசல் விலை உயர்வினால் லாரி வாடகையை அதிகரித்து உள்ளனர். இந்த கூட்டத்தில்  லாரி உரிமையாளர்களும்  கலந்து கொள்ள உள்ளார்கள் அவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி விலை மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றார். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கட்டுமான பொருட்களின் விலை ஏதும் உயரவில்லை.  கடந்த ஆட்சியில்  எந்த விலை நிர்ணயிக்கப்பட்டது அதே விலையில் தான் இப்போதும்  ஜல்லி மற்றும் எம் சென்ட் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

கடந்த ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு எடுப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டேம். இனி அதுபோல நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். சேலம் மாவட்டத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட குவாரிகள் அனைத்தும் அரசு  அனுமதித்த அளவில் மட்டுமே கல் எடுக்கப்படும் என்று கூறினர்.