தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று, 11.09.2021 சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு திரு. S. குமரகுரு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் சார்பு நீதிபதி மாண்புமிகு S. தங்கராஜ் அவர்கள் வரவேற்புரை அளித்தார்கள்..
சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு திரு L. ஆபிரகாம் லிங்கன் அவர்கள் பேசுகையில் “Champion of Justice " என்ற விருது சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு திரு. S. குமரகுரு அவர்கள் பேசுகையில் சமரச மையங்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நடுவர்கள் உள்ளிட்ட 20 நீதிபதிகள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 21 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த வழக்குகள் : 5 ஆயிரத்து 211
தீர்வு காணப்பட்ட வழக்குகள் : 3,011. தீர்வு தொகை : ரூபாய் 38 கோடியே 26 லட்சத்து 66 ஆயிரத்து 307 (Rs. 38,26,66,307)
இதில் 45 வழக்குகள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் நேற்று மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்து மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டது . விவாகரத்து கோரிய இரண்டு தம்பதியினர் மக்கள் நீதிமன்றத்தில் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால், சேர்ந்து வாழ முடிவெடுத்து ஒன்றிணைந்தனர். சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நீண்டநாள் நிலுவையில் இருந்த பாகப்பிரிவினை தொடர்பாக சுமூகமான முறையில் நடத்தப்பட்டு சகோதரர்கள் ஐந்து பேரும் இணைந்து சொத்தை சமரச முறையில் பங்கிட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து பேசிய நீதிபதி, நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் நீதிபதிக்கும், வழக்கறிஞர்களுக்கும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டும் என்றும், அரசு வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் மற்றும் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சுமூக தீர்வு எட்ட வேண்டும். நீதிபதி கூறுவதை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு திரு. S. குமரகுரு கேட்டுக்கொண்டார்.