சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக கள ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, நாளைய தினமே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் மக்கள் ஆதரவுடன் முதலமைச்சராகவர் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று அனைவரின் எண்ணமாக உள்ளது. அதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்றார். கோரிக்கைகள் வைத்தால் காது கொடுத்து கேட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கின்ற முதல்வர் எளிமையான முதல்வராகவும் மக்கள் கொண்டாடப்பட்டார் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. குறைந்த வாக்குகள் வித்தியாசம்தான் 43 தொகுதிகளில் தோல்வியை அதிமுக சந்தித்தது. அதிமுக முறையாக 43 தொகுதிகளில் உழைத்திருந்தால் 1.92 லட்சம் வாக்குகள் கிடைத்து இருந்தால் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்திருப்பார். திமுக என்ற தீய சக்தி இருந்திருக்காது. அதேபோல், அதிமுகவின் மீட்பதில் எத்தனை சோதனை இருந்தும் முகத்தில் சிரிப்புடன் சந்தித்தார். திமுக என்று தீயசக்தியை நெஞ்சில் இருக்கத்துடன் எதிர்த்து பேசுகின்ற ஒரே இயக்கம் அதிமுக தான். நேற்று சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது. முதல்வர், துணை முதல்வர் என எத்தனை பேர் எழுந்து நின்று பேசியும் வேலை ஆகவில்லை. திமுகவை நெஞ்சில் இருக்கத்துடன் எதிர்க்கின்ற ஒரே தலைவன் எடப்பாடி பழனிசாமி. அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற சட்டப்பேரவையில், திமுகவின் தோலுரித்துக் காட்டுகின்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி எப்பொழுதும் அஞ்சமாட்டார். மக்கள் விரும்புகின்ற முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி மக்கள் பணியாற்றுவதற்காக செயல்பட்டு, திமுகவின் முகத்திரையை கிழித்து காண்பிக்கின்ற ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். திமுக கபட நடமாடுகிறது. முல்லைப் பெரியாறு வருவதற்கு இரண்டு லாரிகள் கேரள எல்லையில் நிற்கிறது. அணையை பார்த்து பராமரிப்பதற்காக, பராமரிப்பு பணி கூட செல்வதற்கு காத்திருக்கிறார்கள் என்று கேரளா முதலமைச்சருக்கு திமுக முதல்வர் கடிதம் எழுதினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்திருந்தால் வேறு மாதிரி செயல்பட்டு இருப்பார். எடப்பாடி பழனிசாமி, கேரளா முதல்வர் பினராய் விஜயனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தான் முதலில் கேரளாவிற்கு சென்றிருப்பார் என்றார்.
திமுக ஆட்சியில் மதுபானங்களை வீட்டுக்கு வீடு டெலிவரி செய்வார்கள், பைப் மூலமாக கூட இனி வரும் காலங்களில் திமுக ஆட்சியில் வர கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று மின்சார கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வேண்டும் என்றால், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு செல்லவேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு செல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறார். இதற்காக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து வருகிறார்.
உலகத்திலேயே நீர்மேலாண்மையில் புரட்சி செய்த திட்டம் குடிமராமத்து திட்டம். அதிமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுகவின் சாதனைகளை அனைவரிடமும் கொண்டு செல்லலாம், உங்களுக்கு வாய் பூட்டு யாராலும் போட முடியாது. திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கிய பிறகும் திருமண வீட்டார் பார்ப்பவர்கள் அனைவரையும் பார்க்கும் இடமெல்லாம் தேதி குறிப்பிட்டு திருமணத்திற்கு வந்துவிட வேண்டும் என்று அழைப்பார்கள். அதேபோன்று இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும், மக்களை பார்க்கும் இடமெல்லாம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். இதுதான் தேர்தல் வியூகம் என்றும் கூறினார்.
நவீன சைபர் க்ரைம் முறையில் திமுக செயல்படுகிறது. வாக்காளர் ஒருவரின் பெயர் மூன்று இடங்களில் உள்ளது என்று திமுகவினர் நீக்க சொல்வார்கள். நீக்கியதற்கான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே பெறாது. அந்த முறையில் திமுக செயல்பட்டு வருகிறது. நம்முடைய வாக்குகள் மட்டுமல்ல நியாயமான அனைத்து வாக்குகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல். எனவே எச்சரிக்கையாக அனைவரும் இருக்க வேண்டும் என்றார். அப்பொழுது சைபர் கிரைம் கிடையாது இப்பொழுது தான் சைபர் கிரைம் உருவாகியுள்ளது. சர்வதிகார ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர்த்துவோம் என்று அனைவரும் உறுதி ஏற்போம் என்றும் பேசினார்.