அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் எனது பெயரும் இல்லை -ஆர்.பி.உதயகுமார்
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளர்கள் பெயர் இடம் பெறவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக முக்கிய தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முக்கிய நிர்வாகிகளுடன் சந்தித்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாக இருவரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் தேர்தல் தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கேள்வியை நன்றாக புரிந்து கேளுங்கள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. மற்றவர்களுக்கு தான் பட்டியலில் பெயர் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்ற பணிகளில் ஈடுபடுவார்கள். எனது பெயரும் கூட பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறினார்.
Just In





குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் 2026 ஆம் ஆண்டு பாமகயுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், தனது உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அழைப்பதற்காக வந்ததாக ஜிகே மணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ஆர்பி உதயகுமார், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.