சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்-ராஜநந்தினி தம்பதிக்கு 14 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர் சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பரிசோதித்ததில் சிறுமிக்கு இரண்டு கிட்னிகள் செயலிழந்து போனதாக தெரியவந்தது. இதனையடுத்து தாயார் ராஜநந்தினி மகளுக்கு தனது ஒரு கிட்னியை கொடுத்துள்ளார். அதனால் அந்த கிட்னி 15 நாட்களுக்கு பிறகு செயலிழந்து போனது. பின்னர் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போன தாய் இது குறித்து தலைமைச் செயலகத்தில் உதவி செய்யுமாறு மனு கொடுத்திருந்தார். சிறுமிக்கு சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் இவர் தங்கியுள்ளனர். இதனிடையே மனைவி மற்றும் குழந்தையை விட்டு விஜயகுமார் சென்று சென்றுவிட்டார். இந்த நிலையில் சிறுமி ஜனனி தனக்கு உதவி செய்யுமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில் தன்னுடைய அப்பா எங்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். இரண்டு பேரையும் செத்துப் போங்கள் என கூறுகிறார் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை மிகவும் பயமாக இருக்கிறது. படிக்க கூட முடியவில்லை இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன் வலி தாங்க முடியவில்லை ப்ளீஸ் சிஎம் சார் எங்களை எப்படியாவது காப்பாற்ற முடியுமா ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் என்னை எல்லாரும் செத்துருன்னு சொல்றாங்க என உருக்கத்துடன் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.


 



பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் வழங்கப்படும் தங்கமகள் விருது தன்னுடைய மகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. கடந்த முறை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்ததால் அதனை வாங்க இயலவில்லை தற்போது தன்னுடைய மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் உயிருக்கு போராடும் மகளுக்கு தங்கமகள் விருதினை வழங்க வேண்டும் என தாய் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.



உயிருக்கு போராடும் மக்கள் ஒருபுறம் மகளின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் தாயின் போராட்டம் ஒருபுறம் தமிழக அரசு தாய் மகளின் கோரிக்கையினை பரிசீலனை செய்து, தமிழக முதல்வர் உதவ முன்வர வேண்டும் என்பதை இந்த வீடியோ பார்க்கும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது, வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது விளைவாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சிறுமியை அழைத்து ஆறுதல் கூறினார். பின்னர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சிறுமியின் மருத்துவ செலவை ஏற்பதாக உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.