தருமபுரியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியவர் உள்ளிட்ட 3 பெண்களும், உதவிய இரண்டு இளைஞர்கள் என மொத்தம் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி அருகே, ரயில்வே சாலையில் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக தருமபுரி மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்  தலைமையில் தருமபுரி நகர காவல் துறையினர் சோதனை செய்தனர்.

 



 

அப்பொழுது ஒரு வீட்டில் மூன்று பெண்கள் இருந்துள்ளனர். இந்த அந்த பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில்,  ஓசூரை சேர்ந்த பிரியா (38) என்பவர், தருமபுரி அருகே உள்ள ரயில்வே சாலையில் உள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, பெங்களூரு, மற்றும் வேலூரை சேர்ந்த இரண்டு பெண்களை வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கு  இவர்களுக்கு, உதவியாக இருந்த பாலக்கோடு மற்றும்  காரியமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் சுகுமார் ஆகிய ஆண்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 



 

இதனையடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பிரியா உள்ளிட்ட 3 பெண்களும், உதவியாக இருந்த, ஸ்ரீநிவாஸ், சுகுமார் இருவரையும் காவல் துறையினர்  கைது செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த, 21  மற்றும் 26  வயதுடைய பெண்கள் இருவரையும் மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

 

 



 

அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை 

 

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

 



 

 

இந்நிலையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால், பொது மக்களும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.