தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள் ஒன்றிணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரபு சந்தை கூடுகிறது. இந்த மரபு சந்தையின் ரசாயனம் கலக்காத, இயற்கை முறையில் பயிரிடப்படுகின்ற காய்கறிகள், பழங்கள், கீரைகள், விதைகள், இயற்கை உணவு வகைகள், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இயற்கைச் சூழலுக்கு பாதிப்பில்லாமல், உடலுக்கு கேடு விளைவிக்காமல் இயற்கையான பொருட்கள் கிடைப்பதால், இந்த மரபு சந்தைக்கு தருமபுரி பகுதியில் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இன்றைய மரபு சந்தைக்கு இயற்கை வகையான காய்கறிகள் வாங்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.



 

மேலும் மரபு சந்தையிலேயே இறைச்சி வகையான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, மீன், முட்டை, காடை முட்டை தேன் உள்ளிட்ட வகைகளையும் கிடைப்பதால் இறைச்சி பிரியர்களும் மரபு சந்தைக்கு வந்திருந்தனர். மேலும் தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள், நாட்டு மாட்டு நெய், இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறி, கீரை வகைகள், சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் மரபு சந்தையிலேயே இறைச்சி வகையான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, மீன், முட்டை, காடை முட்டை பணியாரம், நெய் கிச்சடி அரிசி பணியாரம் என உண்டு மகிழ்ந்தனர்.மற்றும் ஒன்பது வகையான பாரம்பரியம் மிக்க நவதானிய உணவுகள், மூலிகை பருப்பு தோசை, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, கருங்குடுவை உள்ளிட்ட உயர் ரக அரிசி தோசை, பீட்ருட் கேரட் தோசை, முடக்கத்தான், வெண்பூசணி, கோவையிலை கலந்த மூலிகை தோசைகள், காடை முட்டை உணவுகளை காலை 8 மணி முதலே குடும்பத்தோடு வந்து ருசித்தனர். 



 

மேலும், ரசாயன பொருட்கள் கலக்காத உணவுகளை பொதுமக்கள் தேடுவதால் இந்த மரபுச் சந்தைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய மரபு சந்தையில் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களின் வருகை சற்று அதிகரித்திருந்தது. இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்கள் இல்லாத உணவு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள மரபுச் சந்தையில் பொதுமக்களுக்கு ஆரோக்கிய உணவை வழங்கி வருவதால், இது பொதுமக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கடந்த வாரத்தை விட இன்றைய மரபு சந்தையில் பொதுமக்களின் வருகை சற்று அதிகரித்திருந்தது.