தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஊராட்சியில் இந்திரா நகரில் 50-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு, 10 இருளர் குடும்பத்துடன் இந்திரா நகர் பகுதிக்கு வந்துள்ளனர். அப்பொழுது அரசு இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, தொகுப்பு வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. மேலும் இலவசமாக ஒரு இணைப்பு மின்சாரம் வழங்கியுள்ளது. இந்த மக்கள் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல், வனப் பகுதியில் கிடைக்கும் சுண்டைக்காய், கிழங்கு பறித்தல், தேன் எடுத்தல் உள்ளிட்ட தொழிலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.



 

இந்த நிலையில் தற்போது வளர்ச்சியடைந்து, குடும்பங்கள் அதிகரித்து, 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்கள் ஒரே வீட்டில், இரண்டு, மூன்று குடும்பத்தினர், இட வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். தற்போது அதே பகுதியில் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதில் ஓலை குடிசையை  இல்லாமல், பிளாஸ்டிக் சீட்களை வைத்து கூரை அமைத்துள்ளனர். மேலும் மண் சுவர் வைத்த  வீடுகள் மழைக்கு கரைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது வருகிறது. இதனால் பெரும்பாலானோர் மண் சுவர் வைக்காமல், சுற்றிலும் பிளாஸ்டிக் சீட்டை வைத்தும், கதவாகவும் பிளாஸ்டிக் சீட்டையே பயன்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையின்போது, சூறைக் காற்று வீசியதில், பிளாஸ்டிக் சீட் முழுவதும் காற்றில் பறந்துவிட்டது.



 

மேலும் இவர்கள் வசிக்கும் இந்த இடத்திற்கு பட்டா இல்லாததால், மின்சாரம் கூட வாங்க முடியவில்லை. இதனால் தொண்டு நிறுவனம் வழங்கிய சிறிய அளவிலான சோலார் விளக்கை பயன்படுத்தி வருகின்றனர். பகல் முழுவதும் வெயிலில் வைத்தும், இரவில் பயன்படுத்தியும் வருகின்றனர். மழைக் காலங்களில் அதுவும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, மிகுந்த சிரம்த்திற்குள்ளாகி வருகின்றனர். இரவில் சில நேரங்களில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விட ஜந்துக்கள் வீட்டில் நுழைகிறது. இது மின்சாரம் இல்லாததால், தெரிவதில்லை. சின்ன குழந்தைகள் இருப்பதால், மக்கள் மிகுந்த அச்சயமடைந்து வருகின்றனர். மேலும் இந்த இருளர் இன  மக்கள் சிலருக்கு ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களும் இல்லை. இதனால் அரசு சலுகைகளை பெறமுடியல் தவித்து வருகின்றனர். 

 

இதனால் இருளர் இன மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா, வீடு, மின்சாரம், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையடைந்துள்ளனர். இதனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருளர் இன மக்களின் மீது கருணை கொண்டு,அடிப்படை வசதிகள் மற்றும்  நிரந்தரமான வீட்டிற்கு பசுமை திட்டத்தில் வீடுகட்டி தர வேண்டும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

 

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினியிடம் கேட்டபோது,

 

சாமனூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் இருளர் குடியிருப்பில், பாலக்கோடு வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் அலுவலர்களை நேரில் அனுப்பி வைத்து ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இருளர் இன மக்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டா, வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஊராட்சியில் இந்திரா நகரில் 50-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு, 10 இருளர் குடும்பத்துடன் இந்திரா நகர் பகுதிக்கு வந்துள்ளனர். அப்பொழுது அரசு இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, தொகுப்பு வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. மேலும் இலவசமாக ஒரு இணைப்பு மின்சாரம் வழங்கியுள்ளது. இந்த மக்கள் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல், வனப் பகுதியில் கிடைக்கும் சுண்டைக்காய், கிழங்கு பறித்தல், தேன் எடுத்தல் உள்ளிட்ட தொழிலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


 

இந்த நிலையில் தற்போது வளர்ச்சியடைந்து, குடும்பங்கள் அதிகரித்து, 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்கள் ஒரே வீட்டில், இரண்டு, மூன்று குடும்பத்தினர், இட வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். தற்போது அதே பகுதியில் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதில் ஓலை குடிசையை  இல்லாமல், பிளாஸ்டிக் சீட்களை வைத்து கூரை அமைத்துள்ளனர். மேலும் மண் சுவர் வைத்த  வீடுகள் மழைக்கு கரைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது வருகிறது. இதனால் பெரும்பாலானோர் மண் சுவர் வைக்காமல், சுற்றிலும் பிளாஸ்டிக் சீட்டை வைத்தும், கதவாகவும் பிளாஸ்டிக் சீட்டையே பயன்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையின்போது, சூறைக்காற்று வீசியதில், பிளாஸ்டிக் சீட் முழுவதும் காற்றில் பறந்துவிட்டது.

 

மேலும் இவர்கள் வசிக்கும் இந்த இடத்திற்கு பட்டா இல்லாததால், மின்சாரம் கூட வாங்க முடியவில்லை. இதனால் தொண்டு நிறுவனம் வழங்கிய சிறிய அளவிலான சோலார் விளக்கை பயன்படுத்தி வருகின்றனர். பகல் முழுவதும் வெயிலில் வைத்தும், இரவில் பயன்படுத்தியும் வருகின்றனர். மழைக் காலங்களில் அதுவும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவில் சில நேரங்களில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விட ஜந்துக்கள் வீட்டில் நுழைகிறது. இது மின்சாரம் இல்லாததால், தெரிவதில்லை. சின்ன குழந்தைகள் இருப்பதால், மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இந்த இருளர் இன  மக்கள் சிலருக்கு ரேஷன் கார்டு, ஜாதிசான்றிதழ், ஆதார்கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களும் இல்லை. இதனால் அரசு சலுகைகளை பெறமுடியல் தவித்து வருகின்றனர். 



இதனால் இருளர் இன மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா, வீடு, மின்சாரம், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையடைந்துள்ளனர். இதனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருளர் இன மக்களின் மீது கருணை கொண்டு, அடிப்படை வசதிகள் மற்றும்  நிரந்தரமான வீட்டிற்கு பசுமை திட்டத்தில் வீடுகட்டி தர வேண்டும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினியிடம் கேட்டபோது, ”சாமனூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் இருளர் குடியிருப்பில், பாலக்கோடு வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் அலுவலர்களை நேரில் அனுப்பி வைத்து ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இருளர் இன மக்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டா, வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆட்சியர் தெரிவித்தார் என்றார்.