சேலம் மாநகர் இரும்பாலை பகுதியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு தலைப்பில் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவ.வேலு பேசுகையில், "தமிழ்நாட்டை உருவாக்க முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிறைய பங்கு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நவீன சிற்பியாக மாற்றியது தமிழக அரசு தான். அதற்கு அவருடைய அரசியல்தான் முக்கிய காரணம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசு கோப்புகளில் அதிக கையெழுத்துயிட்டவர். அரசியல் வாழ்க்கைக்கு அச்சாணியாக சேலம் இருந்தது என்றும் பேசினார். மேலும் கிராமங்கள்தோறும் அரசு பள்ளிகளை ஆரம்பித்து கொடுத்தவர் காமராஜர் தான். தமிழ்நாடு என்று பெயர் சூட்டை அடையாளம் அறிஞர் அண்ணா. ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு லட்சக்கணக்கான அடையாளங்கள் உள்ளது. கருணாநிதியின் அடையாளம் இல்லாத மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் இல்லை" என்றும் கூறினார். தமிழகத்தில் ஒருவேளை பூஜை கூட இல்லாத திருக்கோவிலுக்கு எல்லாம், ஒருவேளை பூஜையாவது நடத்த வேண்டும் என்ற நிலையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். இந்திய வரலாற்றில் 7000 கோடி விவசாயிகளுக்கு கடண் தள்ளுபடி முன்னாள் முதல்வர் கருணாநிதி தள்ளுபடி செய்தார். மேலும் கல்விதான் பொருளாதாரத்தை உயர்த்தும், இதனை உணர்ந்த காரணத்தினால் தான். தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் குறித்து அரசியல்வாதிகள் ஆங்காங்கே ஒவ்வொன்று பேசி வருகின்றனர். தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து நடத்தும் நிலை இருந்தது. அதை மாற்றி தமிழகத்தில் 108 ஆம்புலன்சை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார்"என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "திமுகவில் எத்தனையோ சரிவுகள் இருந்தது. அப்போதெல்லாம் திமுக இயக்கத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காத்து நின்றார். திமுக கட்டுகுலையாமல் இருக்கிறது என்றால் கலைஞரின் எழுத்து,பேச்சு,செயல்பாடுகள் தான் காரணம் என்று கூறினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மூன்று மணி நேரம் இருந்தால் தான் பார்த்துவிட்டு வரமுடியும். அனைவரும் வியக்கும் வகையில் உருவாகியுள்ளது" என்றும் கூறினார்.
இந்த விழாவில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்ற நிலையிலும்,பெண்களுக்கான சமஉரிமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அந்நிய முதலீடு ஈர்த்து தமிழகம் பொருளாதாரத்தில் மேம்படுவதற்கு அடித்தளப்பட்டவர். மக்கள் மனதில் எப்பொழுதும் நீங்காத இடத்தை கருணாநிதி பெற்றிருப்பார்" என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், "சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் உயர் பதவிக்கு வரவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வு பெறவேண்டும் என்பதற்காக வாழ்ந்தவர்.திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தான் நிறைய உள்ளனர்.மற்றவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி திராவிடத்தை காக்க வேண்டும். தமிழகத்தில் 85 சதவீதம் ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய திராவிட மக்கள் தான் இருக்கிறார்கள். மற்றவர்களிடம் தராமல் திராவிட ஆட்சியை நடத்தவேண்டும்.எனவே அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றும் கூறினார்.