தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்  தருமபுரி மாவட்டத்திற்கு திடீரென வந்திருந்தார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயல்படும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், நேரடியாக இன்று காலை திடீரென ஆய்வு செய்தார். இதில் ஒட்டப்பட்டியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதிக்கு சென்ற அமைச்சர் மாணவர்களிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மேலும் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்றும், உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா என்பது பற்றி கேட்டறிந்தார். 



 

இதனையடுத்து அன்னசாகரம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது உணவின் தரத்தை சோதனை செய்வதற்காக விடுதியில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் உணவினை அமைச்சர் சிவசங்கரன் சாப்பிட்டு சோதனை செய்தார். மேலும் விடுதியில் ஏற்பட்டுள்ள பழுதினை உடனே அகற்ற செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அங்கிருந்த மாணவர்கள் தங்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வருவதால் அதனை சுத்திகரிப்பதற்கு Ro இயந்திரம் தேவை என்று சிவசங்கர் இடம் தெரிவித்தனர். 

 



 

அப்போது அமைச்சர் சிவசங்கர் மாணவர்களுக்கு தேவைகள் உடனடியாகப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் விடுதிகளில் மாணவ, மாணவிகளின் தேவையை பூர்த்தி செய்யவே, விடுதியை திடீர் ஆய்வு செய்ய வந்துள்ளேன். இதனால் விடுதியில் உள்ள  மாணவ, மாணவிகளின் குறைகளை கேட்டு, விடுதிக்கான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட சில கோரிக்கைகளை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும்.



 

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகவும் அக்கறையுடனும், கவனத்துடன் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனால் தருமபுரி மாவட்டத்திற்கு வந்திருந்த போது, தமிழக முதல்வர் பென்னாகரம் அரசு ஆதி-திராவிடர் நலத்துறை மாணவர் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அதே போல் விடுதிகளின் தரமும் நன்றாக செயல்பட வேண்டும் என உத்திரவிட்டுள்ளார். தொடர்ந்து முதல்வரின் உத்திரவின் அடிப்படையில் விடுதிகளில்  ஆய்வு செய்து வருகிறேன் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த ஆய்வின், அரசு துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் இல்லை. எந்த அதிகாரிகளுக்கும் வரவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து முதல்வர் ஆய்வு செய்த பென்னாகரம் அரசு ஆதி-திராவிடர் நலத்துறை மாணவர் விடுதியிலும் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.