Minister Muthuswamy: விஜய் பேச்சால் வருத்தமடைந்த திமுக அமைச்சர்

கொள்கை ரீதியாக மக்கள் எவ்வளவு காலமாக மோசமான சூழ்நிலையில் இருந்தனர். பெரியார், அண்ணா, கலைஞர் காலங்களுக்குப் பிறகு தான் பாதுகாப்பான நிலையே வந்தது என்றும் கூறினார்.

Continues below advertisement

சேலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதனால் திமுக பற்றி ஏதாவது சொல்லி வருகிறார். கொள்கை ரீதியாக மக்கள் எவ்வளவு காலமாக மோசமான சூழ்நிலையில் இருந்தனர். பெரியார், அண்ணா, கலைஞர் காலங்களுக்குப் பிறகு தான் பாதுகாப்பான நிலையே வந்தது. அதை சாதாரணமாக பேசுவது வருத்தத்திற்குரியது. மக்களுக்கு என்ன நல்லதோ அதை தான் தமிழக முதல்வர் செய்து வருகிறார் என்று கூறினார்.

Continues below advertisement

மேலும், நாடாளுமன்றத்தில் மறுசீரமைப்பு செய்தாலும் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று அமித்ஷா கூறினாலும் 39 நாடாளுமன்ற தொகுதி, 31ஆக குறைக்க சொல்லப்பட்டுள்ளது. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசுடைய கடமை. இது எல்லாம் அரசியல் கட்சியுடைய கடமையும் அதுதான் முதல்வரும் செய்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பற்றி திமுக பேசவேண்டும் என்று தான் பேசி வருகிறார். அதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டாம் என்று திமுக நினைக்கிறது.

கல்வி நிதியில் ரூ.2000 கோடி இலவசமாக கொடுக்கவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய கடமை உள்ளது. கொடுக்கும் நிதி வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அதற்காக மற்றொரு நிபந்தனைகள் போடுவது ஒற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

மொழிக்காக திமுக எதுவும் செய்யவில்லை என்று கூறினால் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். செம்மொழி எவ்வாறு ஆனது. உலகத்திற்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றும் தெரிவித்தார்.

தமிழ் தெரியாமல் முனைவர் பட்டம் பெறமுடியும் என்ற நிலை தமிழகத்தில் இல்லை. தமிழ் தெரியாமல் வேறு ஏதாவது படிக்கிறார்களா என்றால் சொல்லமுடியாது. தமிழில் படித்தால் மட்டுமே தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தமிழ்மொழி கொள்கை ஒன்று மட்டும்போதும் என்று அன்புமணி கூறினாலும், அதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அறிஞர்கள் எல்லாம் உருவாக்கி சென்றுள்ளனர். நம்முடைய தமிழ்மொழி பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் உலகம் முழுவதும் எந்த மொழி தேவைப்படுகிறது அந்த மொழி தேவை என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola