பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்கள் சேதுநாயக், விமலம்பிக்கை ஆகிய இருவருக்கும் உறுதிமொழி ஏற்க வைத்து திருமணம் நடத்தி வைத்தனர்.
திருமண விழா மேடையில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கு நிதியை வழங்குவோம், இல்லாவிட்டால் வழங்க மாட்டோம் என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. கல்வி என்பது மாநில அரசின் உரிமை. கல்வி பட்டியல் மாநில பட்டியலில் இருந்தது, ஒரு சட்டத்தை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மாநில அரசின் உரிமை. அதை யாரும் திணிக்க கூடாது. உலகளவில் பழமையான தாய்மொழி தமிழ் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதை முன்னிலைப்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மையான மத்திய அரசு மூன்று மொழி கொள்கை, தமிழக அரசின் இரண்டு மொழி கொள்கை, ஆனால் பாமக என்பது ஒரு மொழிக் கொள்கைதான். சரியான கொள்கை என்பது ஒரு மொழிக் கொள்கை மட்டும் தான் என்றார்.

உலகம் முழுவதும் வெற்றிபெற்ற நாடுகள் எல்லாம் தாய் மொழியை படித்து தான் வெற்றி பெற்றுள்ளார்கள். நோபல் பரிசு வென்றவர்கள் எல்லாம் தாய்மொழியை படித்து தான் வெற்றி பெற்றுள்ளார்கள். என் மொழி தான் உலகத்திலேயே பழமையான மொழி என்ற கர்வம் நமக்கு உள்ளது. ஆனால் தமிழ் மொழி அழிந்து வருகிறது. எந்த ஒரு மொழியையும், ஒவ்வொரு மொழியை அழிக்க முடியாது. இதை வைத்து அரசியல் செய்ய கூடாது. தற்போது இவ்வாறு பேசுவதற்கு காரணம். ஏன் என்றால் பத்து மாதத்தில் தேர்தல் வரப்போவதால் அரசியல் செய்து வருகிறது. இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் படிக்கலாம் ஆனால் திணிக்க தான் கூடாது. தமிழ் மொழியை தமிழ்நாட்டில் பாதுகாக்க வேண்டும் என்றும் பேசினார்.
தமிழகத்தில் 56 தனியார் பள்ளிகள், 45 சதவீதம் அரசு பள்ளிகள் உள்ளது. இதுதான் ஏற்புடையது அல்ல. தமிழக அரசிடம் கல்விக்கு தமிழுக்கும் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். கடந்த 26 ஆண்டு காலமாக தமிழ்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்ற வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தின் தமிழ் தெரியாமல் பள்ளி, கல்லூரி மட்டுமில்லாமல் முனைவர் பட்டம் வெல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் அவர்கள் தாய்மொழி இல்லாமல் படிக்க முடியாது என்றார்.
இந்த திருமணத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். நான் அரசியல் பேசவில்லை, பொதுவான கருத்துக்களை தான் கூறுகிறேன். எந்த மொழியை திணிக்க தான் கூடாது புரிந்து கொள்ள வேண்டும். இதனால் தமிழகத்திற்கு 2100 கோடி கல்விக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் விட்டுவிட்டு போக வேண்டும். தங்களுக்கு நிதி எல்லாம் வேண்டாம், உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சொல்ல வேண்டியது தானே. பாமக கௌரவ தலைவர் நினைத்தால் 10.5 சதவீதத்தை வாங்கி கொடுத்துவிடுவார். முதல்வர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேரடியாக வருகை தந்தார் என்றும் கூறினார்.