சேலம் : மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 119.60 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,717 கன அடியிலிருந்துவினாடிக்கு 13862 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

Continues below advertisement

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

கர்நாடகாவில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 13 ஆயிரத்து 862 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

இதே போல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Continues below advertisement

ஒக்கேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு 

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 12,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

சாத்தனூர் அணை நிலவரம்...

 

சாத்தனூர் அணை 119 அடியில் தற்போது 113.45 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 7321 மி.க.அடியில் தற்போது 6118 மில்லியன் கன அடி நீர் உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 357கன அடியாக  அணையின் சேமிப்பக சதவீதம் 83.57 %, தற்போது 357 கன அடி நீர்வரத்து உள்ளது எனவும்,

தற்போது கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் அதிகரிக்க கூடும் எனவும் தண்ணீர் வறுத்து அதிகரித்த பின் எவ்வளவு அளவு நீர் வரத்து வந்து கொண்டிருப்பது என அதிகாரிகள் தெரிவிப்பதாக தெரிவித்தனர். 

மேலும் அணையின் நீர்மட்டம் 114 அடி உயர்ந்த பிறகு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதனால் ஆற்றங்கரையோர உள்ள மக்கள் ஆற்றைக் கடக்கவும் குளிக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.