சேலம் : Mettur dam காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 42,250 கன அடியாக இருந்த நிலையில், நேற்று மாலை, 35,250 கனஅடியாக குறைந்தது., இதன் காரணமாக மேட்டூர் நீர் திறப்பு 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் நீர் திறப்பு 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணையால் இருந்து நீர் வெளியேற்றம் ஆனது அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 42,250 கன அடியாக இருந்த நிலையில், நேற்று மாலை, 35,250 கனஅடியாக குறைந்தது. அதற்கேற்ப நீர் திறப்பு, நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு, 42,000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று, 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 32,000 கன அடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து விநாடிக்கு 43,000 கன அடியில் இருந்து 32,000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் 16வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேன க்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.