மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 11,988  கனஅடியில் இருந்து தற்போது அதிகரித்துள்ளது.

Continues below advertisement

நேற்று இரவு  8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,923 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 11,988 கன அடியாக அதிகரித்த நிலையில் தற்போது 18,905 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.

 

Continues below advertisement

மேட்டூர் அணை: 05-08-2026 மாலை 04:00 மணி நிலவரம் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 74.01 அடியிலிருந்து 74.55 அடியாக உயர்ந்தது

நீர் இருப்பு: 36.74 டிஎம்சி

நீர் வரத்து: வினாடிக்கு 11,988 கன அடியிலிருந்து, 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது 

நீர் வெளியேற்றம்: வினாடிக்கு  1,500 கன அடி காவிரியில் (குடிநீர் தேவைக்காக) திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.