அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநிலத் தலைவர் பூமொழி சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தனர். தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூமொழி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். 


 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூமொழி கூறுகையில், 


தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சார்பில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்தேன். தேர்தலில் பாஜக தலைமையிலான மதவாத கட்சிகளை எதிர்த்தும், திமுக தலைமையிலான மக்கள் விரோத கட்சிகளை எதிர்த்தும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக கூறினார்.



மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு 1 சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, நோட்டாவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வந்ததாகவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரிக்க உள்ளதாக கூறினார்.


அப்போது, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.