சேலம் மாநகர் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக மாநில எஸ்டி பிரிவின் மாநில செயலாளர் பாப்பண்ணா மற்றும் தளித் தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "பாஜக எஸ்டி அணியின் மாநில செயலாளர் பாப்பண்ணா மற்றும் தளித் தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்ததாக இருக்கிறார். நிச்சயமாக மிகக் கூட்டணி அமைப்பார் தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெறுவார். நடவடிக்கையின் வாயிலாக ஊடகங்களுக்கு அதிமுக தெரிவிக்கும். டிடிவி தினகரன், இபிஎஸ் பற்றிய விமர்சனம் குறித்த கேள்விக்கு, தரம் தாழ்ந்த மனிதரைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஓபிஎஸ் கூற்றின்படி சொன்னால் இரண்டும் முறை முதல்வராக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா போட்ட பிச்சையின் பொதுவாழ்வில் இந்த இடத்திற்கு வந்தவர் இந்த இடத்திற்கு வந்த பிறகும் சொந்த புத்தியில் இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார். உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் இருந்து அனைத்து நீதிமன்றங்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தான் இரட்டை இலை சினம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்புக்கு பிறகும் ஓபிஎஸ் உளறி கொண்டிருக்கிறார் என்றால் யாரை ஏமாற்று நினைக்கிறார் என்பது அவருக்கு தான் தெரியும்" என்று கூறினார்.