நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வாக்கு சேரிக்க செல்லும்  வேட்பாளர்கள் பல்வேறு வகையான யுக்திகளை கையாண்டு வருகின்றனர், டீ போடுவது, பஜ்ஜி சுடுவது, காய்கறி விற்பது என தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணன், அந்த வார்டு மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பொது மக்களின் பழுதான காலணியை வாங்கி அதை தைத்து கொடுத்ததோடு நின்று விடாமல் அதற்கு பாலிஷ் போட்டு கொடுத்துவிட்டு தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வாக்கு சேகரித்தார்.

 



 

வேட்பாளரின் இந்த அணுகுமுறை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாய் அமைந்திரருந்தது. மேலும் காலணி எப்படி உங்கள் கால்களை பாதுகாத்து உழைக்கிறதோ அப்படி நானும், உங்களுக்கு உழைப்பேன் என தெரிவித்து, எனக்கு  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்.


 



 




மீனை சமைத்து வாக்கு சேகரித்த அதிமுகவினர்.

 



 

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகா்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி அதிமக சாா்பில் தருமபுாி மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினா் தீவிர வாக்கு சேகாித்து வருகின்றனா். இன்று தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளா்களை ஆதாித்து வாக்கு சேகரித்தனர். அப்பொழுது  9-வது வார்டு அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜ், 32வது வாா்டு கஸ்தூாி பலராமனை ஆதாித்தும் 14வது வார்டு அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்தும் வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டனா்.

 



 

 

இந்நிலையில் 14-வது வாா்டில் வாக்கு சேகாிப்பின் போது அதிமுக நகர செயலாளா் பூக்கடை ரவி, வித்தியசமான முறையில் கல் மீனை சமைத்து வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டாா். இந்த வாக்கு சேகரிப்பில், அதிமுக பத்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டனா். தொடர்ந்து வாக்கு சேகாிப்பின் போது பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.