பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 67 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் தேர்வு பெற்று உள்ளனர். இன்று கட்சி வலிமையோடு பயணித்து வருகிறது. மிக விரைவில் மாநில தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 12 நிதிநிலை அறிக்கையை பாரதப் பிரதமர் தந்துள்ளார். இந்த 12 நிதிநிலை அறிக்கையிலும் ஆண்டுக்கான தேசத்தின் வளர்ச்சி அதே நேரத்தில் நீண்ட நெடிய நேரத்திற்கான புதிய கட்டமைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 50 ஆண்டு கால தொடர் திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். உலக அரங்கில் பாரத தேசத்தின் உயர்வு எல்லா வகையிலும் உயர்த்தி, அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, இதற்கான திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். வாக்குகளுக்காக வரவு செலவுத் திட்டங்களை போடுபவர் அவர் அல்ல. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வேண்டுமானால் வரவு செலவுத் திட்டங்களை ஓட்டுக்காக போடலாம். தேர்தலுக்காக பிரதமர் பட்ஜெட் போடவில்லை. தேசத்திற்காக பட்ஜெட் போட்டுள்ளார். அவர் கொடுத்துள்ள திட்டங்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் தேசத்தின் வளர்ச்சிக்காக திட்டங்கள் கொண்டு வந்துள்ளார்.


K.P.Ramalingam: தேர்தலுக்காக பிரதமர் பட்ஜெட் போடவில்லை, தேசத்திற்காக பட்ஜெட் போட்டுள்ளார் - கே.பி.ராமலிங்கம் ஆவேசம்


ஈரோடு கிழக்கு நடந்த தேர்தலிலும் போட்டியில்லை. ஆனால் ஆளுங்கட்சி ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளது. சீமான் எதற்கு போட்டி மோட்டார் என கேட்டார்கள். சீமான் போட்டி போட்டதால் தான் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். முத்தரா கடன் அதிகம் தமிழகம் பெற்றுள்ளது. புதிய திட்டங்களுக்கு பணம் தரவில்லை என கூறுகிறார்கள். ஆனால் அப்ரூவல் கொடுத்தால் தானே பணம் தருவார்கள் என்று கேள்வி எழுப்பினார். யானை பசிக்கு சோளக்கொடி போட்டார்கள் என கூறுகிறார்கள் ஆனால் அந்த சோளப் பொறிக்க கணக்கு கொடுத்தீர்களா? தரவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு என்ன வேலை. டெல்லிக்கு சென்று பேச வேண்டும் . இந்த நிதிநிலை அறிக்கை சிறப்பான நிதி நிலை அறிக்கை. இதுவரை வந்த நிதிநிலை அறிக்கைகளில் தற்போது வந்துள்ள நிதி நிலை அறிக்கைசிறந்த நிதி நிலை அறிக்கை என்று கூறினார்.


100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து தலைமைச் செயலாளர் பேட்டி தர வேண்டும். முதலமைச்சர் நிதி தரவில்லை என கூறுவது குறித்து முழுவதும் தலைமைச் செயலாளர் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு போட்டுள்ள திட்டங்களை ஏற்றுக்கொண்டால் மத்திய அரசு நிதி தரும் இல்லையென்றால் எப்படி நிதி தரும். மாணவர்களுக்கு அரசியல் கூடாது. பேரறிஞர் அண்ணாவே கூறியுள்ளார் மாணவர்களுக்கு அரசியல் கிடையாது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் என போட்டுக்கொண்டு திமுகவினர் அமர்ந்து கொள்கிறார்கள். அரசியல் கட்சியை சாராதவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் போட வேண்டும். அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் யார் ஆளுங்கட்சி சேர்ந்தவர்தான் தலைவராக உள்ளார்.



சேலம் மாவட்டம் மல்லியக்கரையில் மாணவி பாலியல் தொல்லைக்கு பட்டுள்ளார். எட்டு நாட்களாக பெற்றோர் ஆசை செய்யும் தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறார்கள் இது என்ன நியாயம். 14 வயது சிறுமிக்கு பாலியல் நோய் தொல்லை கொடுத்து உள்ளனர். இதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் சீர் திட்டத்திற்கு காரணம் பாலியல் குற்றச்சாட்டுகள் முழுவதற்கு காரணம் அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக திமுக பிரமுகர்கள் இருப்பது தான். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் நாங்கள் புகார் தர தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.


மத்திய அரசு இந்திய பேரரசு இந்தியா முழுவதற்கும் தான் பட்ஜெட் போட்டு உள்ளது தமிழ்நாட்டுக்கு என்று தனியாக போடப்படவில்லை என்றார்.


நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதே எனக் கேட்டதற்கு, விஜய் வந்தால் கூட்டம் அதிகமாக கூடுகிறது. பிரச்சனை வருகிறது என்பதால் கொடுத்து இருக்கிறார்கள். சோவிற்கு கூட கொடுத்து இருந்தனர் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து தேசியத்தையும் தெய்வீகத்தையும் அழித்து விட முடியாது. தமிழ்நாடு பண்பட்ட தேசம் என்றார்.