சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு விவாகரத்தில் பரபரப்பாக பேட்டியளித்த தனபாலின் மனைவி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில்,  தனபாலின் மனைவி, கோடநாடு விவகாரம் குறித்து பேட்டி கொடுக்கவேண்டாம் என்று கூறியதால், தனது கணவர் தனபால் கேட்க மறுக்கிறார். பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியதற்காக தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறினார். மேலும் தாய் வீட்டிற்கு வந்து நிலையில் இங்கும் வந்து தன்னை அடிப்பதாக கூறினார். இதுதொடர்பாக தாரமங்கலத்தில் புகார் அளித்தால் புகரை வாங்க மறுப்பதால், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.



கோடநாடு வழக்கு தொடர்பாக தனது கணவர் தனபால் கூறுவது உண்மையில்லை. யாரோ சொல்லிக் கொடுத்து பேசிவருகிறார். இதுபோன்று வீட்டில் இதுவரை எதுவும் பேசியதில்லை. ஆனால் தற்போது புதிதாக பேசுகிறார். கனகராஜ் இறப்பதற்கு முன்பாக, 6 மாதமாக தனது கணவர் தனபாலும், கனகராஜிம் பேசாமல் இருந்தனர். ஆனால் எப்பொழுது இருவரும் பேசிக்கொண்டனர் என்பது குறித்து தெரியவில்லை என்றும் பேசினார். தனது குடும்பம் குறித்தும் எதுவும் கலந்து பேசமாட்டார் அவரது முடிவெடுப்பார். கோடநாடு வழக்கு குறித்து என் கணவர் தனபால் பேட்டி கொடுத்தது யாரோ இயக்கி செயல்படுகிறார். இவருடன் இருந்தால் தன்னை கொன்றுவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. எனவே எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். எனக்கு தனது கணவர் தனபால் தான் ஆபத்து. எனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறினார்.


தன்னையோ தனது குழந்தைகளையோ யாரும் வந்து மிரட்ட கிடையாது. இதுவரை எங்கள் வீட்டிற்கு யாரும் வந்ததில்லை, பாதுகாப்பதற்காக வந்த காவல்துறையை பார்த்து தான் பயமாக உள்ளது என்று பாதுகாப்புக்கு வந்த காவல்துறையிடமே கூறியதாக பேசினார். தனது வீட்டிற்கு கட்சிக்காரர்களோ, மற்றவர்களோ யாரும் வந்தது கிடையாது என்றார். தனக்கும், தனது கணவர் தனபாலுக்கும் ஒற்று வரவில்லை என்று புகார் அளித்தேன். ஆனால் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை அதனால் இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.