தமிழகத்தில் ஆடி என்றாலே மிகவும் புகழ்பெற்ற மாதமாகும், அதுவும் குறிப்பாக ஆடி மாதத்தில் பெண் தெய்வங்களுக்கு சிறப்பான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதேபோல் ,கரூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் அதிகளவில் ஆலயம் வருகின்றனர். அதுவும் குறிப்பாக இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமியை தரிசிக்க கூட்டம் ,கூட்டமாக ஆலயம் வரத்தொடங்கினர். நிலையில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் ஆலய வாசலில் எப்பொழுதும் போல சூடம் ,நெய்விளக்கு மற்றும் உப்புக் கல்லை வாங்கி சாமிக்கு நேத்திக்கடன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் அடுத்த பசுபதிபாளையம் அருணாச்சலம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி 50 வயது ,தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கரூர் மாரியம்மன் ஆலயத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்பொழுது ஆலய வாசலில் கூட்டம் கூட்டமாக குனிந்து அம்மனுக்கு சூடம் ஏற்றும் போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை லாவகமாக கழட்டி எடுத்து சென்றுள்ளார்.
கரூர் உழவர் சந்தை வஞ்லீஸ்வரர் ஆலயத்தின் முகப்பு காட்சி
இன்று வழக்கத்தை விட ஆலய வாசலில் கும்பல் அதிகமாக இருந்ததால், இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர். உடனே கரூர் நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போல் கரூர் மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அருகிலுள்ள கடைக்காரன் இடமும் இதைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் வருகின்றனர். கரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சற்று பதட்டமாகவே காணப்படுகிறது.
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் திருட்டு நடைபெற்ற இடத்தின் காட்சி
இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உழவர் சந்தை அருகே உள்ள வஞ்சிலீஈஸ்வரர் ஆலயத்தில் அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் செயின் திருட்டுப் போனதும் அதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் குற்றவாளியை பிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகை, பணம், பொருள் ஆகியவற்றை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். என பல்வேறு காலகட்டத்தில் போலீசார் மற்றும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்துவரும் நிலையில், சிலர் பக்தர்கள் அஜாக்கிரதையால் இப்படிப்பட்ட கொள்ளைகளும் அரங்கேறி வருகிறது. இந்த திருட்டு சம்பவத்தால் மற்ற பக்தர்களும் பீதியடைந்துள்ளனர்.