ஆளுநர் என்பவர் அரசியல் சட்டத்திற்ககுட்டபட்டவர், என்பதை நினைத்து, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இவ்வாறு பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.


தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில்  நடந்த 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையை  காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி,  காந்தி, நேரு, வா.ஊ.சி. போன்றவர்கள் எல்லாம் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றனர். ஆனால் ஆர். எஸ். எஸ்., இயக்கம் அவர்களுடைய தொடர்புடைய கிளை இயக்கம் ஜனசங்கம் எல்லாம் ஒருநாள்கூட சுதந்திர போராடத்தில் பங்கேற்காதவர்கள், சுதந்திரத்திற்காக போராடி சிறை செல்லாதவர்கள்  அவர்கள் வரலாற்றில் இரண்டு முறைதான் தேசிய கொடி ஏற்றி உள்ளார்கள் நாக்பூரில், ஒருமுறை சுதந்திரம் கிடைத்த போது காவி கொடியுடன் தேசியகொடியை ஏற்றினார்கள். இரண்டாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தேசிய கொடியை ஏற்றினார்கள். சுதந்திர தினவிழாவை கொண்டாடும் முயற்சியை வரவேற்கிறோம். ஆனால் இதுவரை சுதந்திரதினவிழாவை கொண்டாட இருந்தீர்கள் இதற்கு காரணம்  என்னவென்று அந்த இயக்கங்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், ஒரு மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி பொது வினியோக கடைகளில் தேசிய கொடியை 20 ரூபாய் கொடுத்து வாங்கினால் தான் அரிசி பருப்பு கொடுப்பதாக கூறி உள்ளனர்.




அது தவறு இந்த உணர்ச்சி மக்களிடையே இயல்பாக உருவாக்க வேண்டும். ஒரு அழுத்தம் கொடுத்து வாங்குங்கள் என கூறுவது சரியில்லை, மத்திய அரசு அதை மாற்றி கொள்ளவேண்டும். ஆளுநர் மாளிகையில் ரஜினி சந்தித்து அரசியல் பேசியது தொடர்பாக தவறு இல்லை என  புதுவை ஆளுனர் தமிழிசை பேசியது  குறித்து அழகிரி கூறும் போது, ஆளுநர் ஒரு கட்சியை சார்ந்தவர்தான் அவரும் வாக்களிப்பவர்தான். ஆனால் அவர் ஏன் சட்டமன்றத்தில் கருத்து சொல்ல முடிவதில்லை. அமைச்சரவை என்ன எழுதி கொடுக்கிறார்களோ அதை தான் அவர் வாசிக்கிறார். அதை நாம் சொல்லவில்லை அதனை அரசியல் சட்டம் சொல்லி இருக்கிறது. அதே  போலத்தான் ஆளுநர் மாளிகையில் அரசியல் நடவடிக்கைகள் இருக்ககூடாது. ஆளநர் மாளிகைக்குள் சில அரசியல் மரபுகள் உள்ளது.




அதைத்ததான் அவர்கள் செய்ய வேண்டும் தமிழிசை அப்படி சொல்லியிருந்தால் அதை மாற்றி கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விவசாயத்தில் சிரமம் உள்ளது. நெல், கரும்பு, கோதுமைக்கு குறைந்த பட்சம் ஆதார விலையை நிர்ணயம் செய்துள்ளோம். ஆனால் புஞ்சை பயிர்களுக்கு அது போன்று இல்லை. எண்ணைவித்து பொருட்களான நிலக்கடலை, எல்லு மற்றும் புஞ்சை பயிர்களுக்கு இல்லாததால் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். சமையல் எண்ணை விலை ஏறியதற்கு காரணம் நாட்டில் எண்ணைவித்து பயிர்களை விவசாயிகள் பயிரிட அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில்புஞ்சை பயிர்கள்தான் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் புஞ்சை பயிர்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அப்போது தான் உற்பத்தி அதிகரிக்கும். ஆதார விலை கொடுத்தால் எண்ணை வித்துக்குகள் நாடு முழுவதும் பரவி எண்ணை விலையும் குறையும்.  எண்ணைவித்து உள்ளடக்கிய புஞ்சை பயிர்களுக்கும் அரசு குறைந்த பட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண