கடந்த சில நாட்களாக தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள, தருமபுரி, ஒட்டப்பட்டி, தேவரசமாபட்டி, ஆட்சியர் இல்லம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவுகள் ஏற்பட்டது.
அதிகாலை போலவே காலை 9 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கடுங்குளிர் நிலவி வருவதால், மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
தருமபுரி அருகே தென்பெண்ணை ஆற்றில் பிரதம மந்திரி மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 84,000 மீன் குஞ்சிகளை சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் விடுவித்தார்.
தமிழகத்தில் மீன்வள மையம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்பண்ணையாற்றில் கே.ஈச்சம்பாடி அணைப் பகுதியில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தாய் மீன்கள் சேகரிக்கப்பட்டு, மேட்டூர் அணையில் உள்ள மீன் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் மூலம், இன்று தென்பெண்ணை ஆற்றில் கே.ஈச்சம்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருகில் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பில் 84,000 மீன் குஞ்சுகளை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.சம்பத்குமார் விடுவித்தார்.
இதில் கட்லா, ரோகு, பாறை, கல்பாசு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டின மீன் குஞ்சுகள் தென்பண்ணையாற்றில் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்