சேலம் மாநகர் மூன்று ரோடு பகுதியில் தேசிய தொண்டு அறக்கட்டளையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி நிறுவனம் மற்றும் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை என் கீழ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் இயங்கும் ஆறு வயதுக்கு உட்பட்ட காது கேளாத இளம் சிறுவர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்கு பகல் நேர பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா என்னும் தன்னார்வல தொண்டு நிறுவனத்தின் கூடுதல் முயற்சியில் காது கேளாமையுடன் பார்வை குறைபாடு உடையவருக்கான ஸ்பர்ஸ் பயிற்சி மற்றும் அவர்களின் வாழ்வில் மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement



இந்த நிகழ்ச்சியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் சேலம் மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ஜெயந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 


இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் தலைவர் வாசுகி கூறுகையில், இந்த நிறுவனமானது 2010 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 150 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் காது கேளாமையுடன் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ தேவைகள், உபகரணங்கள் வாங்க பண உதவி, மருத்துவத்திற்கான பண உதவி என அனைத்தும் இந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம் மற்றும் பந்தயம் மாவட்டங்களில் உள்ள காது கேளாமையுடன் பார்வை குறைபாடு உடையவருக்கான செயல்பாடு இந்தத் திட்டம் தனித்துவம் வாய்ந்தது மற்றும் முதன்மையானது. எனவே சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள காது கேளாமையுடன் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது நிறுவனத்தில் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.



மேலும், இந்த நிறுவனத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 15 சிறப்பு ஆசிரியர்களை கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ தேவைகள், சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் போன்றவையும், வீட்டில் இருந்து வர முடியாத மாற்றத்திறனாளி குழந்தைகளுக்கு வீட்டிற்கு சென்ற பயிற்சியும், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாற்றுத் திறனாளி மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.