தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனா். முக்கியமாக பண்டிகைகள் மற்றும் சுப முகூா்த்த நாட்களை நம்பி செலவு செய்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பூக்கள் அனைத்தையும் தருமபுாி நகர பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். மேலும் இடைதரா்களிடமிருந்தும் பூக்கள் கடைக்கு விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அதிக அளவில் பூக்கள் வரும் என எதிா்ப்பாா்த்த நிலையில் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தருமபுாி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்த காரணத்தால் பூ விவசாயிகள் பூக்களை சந்தைக்கு எடுத்து வரவில்லை. இதனால் பூக்கள் வரத்து குறைவின் காரணமாக பூக்கள் விலை அதிகாித்துள்ளது. 



 

இன்றைய சந்தையில் குண்டுமல்லி, சன்னமல்லி ரூ.600, கனகாம்பரம் ரூ.500 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ.120, சாமந்தி ரூ.100, செண்டு மல்லி ரூ.80, ஜாதிமல்லி ரூ.180, வாடாமல்லி ரூ.50, கோழி கொண்டை ரூ.20, பன்னீா் ரோஸ் ரூ.150, ரோஸ் கட்டு ரூ.150, அலாி 100 ரூபாய் என விலை உயர்ந்து விற்பனையானது. ஆயுத பூஜைக்கு பிறகு விலை உயர்த்த நிலையில், இன்று மேலும் புரட்டாசி மூன்றாவது சனி விரதம் என்றாலும், பூக்கள் விலை அதிகரிப்பு காரணமாக பூக்கள் வாங்க மக்கள் ஆா்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்தனர்.

 

------------------------

 

தருமபுரி உழவர் சந்தையில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி 54 டன் காய்கறிகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை.

 

தருமபுரி உழவர் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 30 டன் அளவிற்கு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதங்களில் இறைச்சி உண்ணாமல் விரதம் இருந்து வருகின்றனர். இன்று புரட்டாசி நடு  சனிக் கிழமை விரதம் என்பதால், தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.



 

இதனால் உழவர் சந்தையில், கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து  விற்பனையானது. இதில் தக்காளி ரூ.34, கத்திரிக்காய் ரூ.30, வெண்டை ரூ.20, கொத்தவரை ரூ.34, அதிகபட்சமாக முருங்கை ரூ.130, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனயானது. இதில் வெண்டைக்காய் மட்டும் குறைவாக இருந்ததால், ஒருசிலர் கிடைக்காமல், ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் 160 விவசாயிகள் கடை போட்டு இருந்தனர். இன்று காய்கறிகளை வாங்க 10050 நுகர்வோர் வருகை புரிந்தனர். மேலும் பழங்கள் காய்கறிகள் என மொத்தம் 54 டன் எடையுள்ள காய்கறிகள் 18 இலட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, பொதுமககள் வருகை அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி- தருமபுரி சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் மாற்றி அமைத்தனர்.