தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்வது வழக்கம். நாளை வைகுண்ட ஏகாதேசிய முன்னிட்டு இன்று ஏராளமான விவசாயிகள் விளைவித்த பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனால் பூக்கள் விலை உயர்ந்தது. இனாறைய சந்தையில் மல்லிப்பூ விலை கிலோ 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் சம்பங்கி பூ கிலோ 70 ரூபாய்க்கும் ரோஸ் கிலோ 150 ரூபாய்க்கும், கோழிகொண்டை கிலோ அறுபது ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் கிலோ 200 ரூபாய்க்கும் காக்கடா கிலோ 400 ரூபாய்க்கும், சன்னமல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்பனையானது.
  

 

ஆனால் மாவட்டத்தில் சம்பங்கி மற்றும் சாமந்தி பூக்கள் வரத்து அதிகரிப்பால், சம்பங்கி  மற்றும் சாமந்தி பூ கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால்  பூக்களை பறிக்க ஆகும் கூலி கூட கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  விற்பனை ஆகாத பூக்களை தருமபுரி நகராட்சியின் மூலம் அப்புறப்படுத்துவதற்கு ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் வசூலிக்கின்றனர். அதற்குக் கூட தருவதற்கு எங்களிடம் காசு இல்லை. விவசாயி மட்டும் செய்யக்கூடாது விவசாயியாக வாழ்வது மிகவும் கஷ்டம் விளைவித்த பொருட்களுக்கு விலை கூட நிர்ணயிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.



புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்-அருவியில் குளித்தும், பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக உள்ளது. இன்று புத்தாண்டு மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். 

 



 

 ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும், தொங்குப் பலத்தின் மீது நின்றும் பிரதான அருவி, 5 அருவியின் அழகை கண்டு ரசித்து, குடும்பம் குடும்பமாக மீன் உணவை, உண்டு மகிழ்ந்தனர். இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. இன்று புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.