தமிழகம் முழுவதும் மின்சார துறை சார்பில் ஆண்டுசோறும் தேசிய மின் சிக்கன தினம் டிசம்பர் 14 தேதி அன்று உலகம் முழுவதும் அணுசரிக்கப்படுகிறது.  இதில் மின் சிக்கன விழிப்புணர்வு வாரமாக டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் எரிசக்தி வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எரிசக்தி ஆற்றலைப் பாதுகாப்பது ஆரோக்கியமான, நிலையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய முதல் படியாகும் என்பதால், இந்த நாளில் அரசாங்கம், வணிகங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
இன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்பணர்வு பேரணி நடைபெற்றது.  தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி பேரணி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வரை மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு மின் சிக்கனத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, ஊழியர்கள் வழங்கினர். மேலும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி மின் சிக்கனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளும் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணிகளை முழுமையாக செய்திட வேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த பேரணியில் 100-ககும் மேற்பட்ட மின்சார துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 
 
ராகுல் காந்தியின் 100வது நாள் நடைபயணம்-பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சினர் கொண்டாட்டம்
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தக்காளி கணேசன் தலைமையில் ராகுல் காந்தியின் 100வது நாள்  நிறைவு நடைபயணம் கொண்டாப்பட்டது.
 
இதில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணமானது  இந்திய ஒற்றுமை பயணம்
மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நெடிய நடைப் பயணத்தை மேற்கொண்டார். இந்த நடைப்பயணம் 12 மாநிலங்களில் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைகிறது.
நூறாவது நாள் நிறைவை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி கொடியினை  ஏற்றி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிலம்பரசன், ராஜேந்திரன், மாவட்ட விவசாயிகள் அணி தலைவர் அன்பழகன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், நகர செயலாளர் ரகமத்துல்லா, நகர துணைத் தலைவர் பாலாஜி குமார், முன்னாள் நகர தலைவர் சதாசிவம் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிசார் மைதீ, வக்கீல் ஜெயராமன், மாவட்ட பொறுப்பாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.