தருமபுரி  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் தருமபுரி மாவட்ட பொறுப்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் G.R.சுவாமிநாதன் M. நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அந்தந்த வழக்குகளின் விசாரணை குறித்தும் நீதிபதி கேட்டறிந்தார். மேலும் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதேபோன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்க வேண்டிய வழக்குகள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி, குற்றவியல் வழக்குகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவரித்தனர். மேலும் வழக்குகளை விசாரணையை காலம் தாமதம் இல்லாமல், விசாரணை செய்து முடிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறை ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.



இந்த ஆய்வின் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்படும் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உள்ளகட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிபட்டி நீதிமன்றங்களிலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு நாளை 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



 

ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்-அருவியில் குளித்தும், பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக உள்ளது.  இதனால் இன்று  ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். 

 



 ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. இன்று சுற்றுலா பயணிகள் விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.