சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இளங்கோவன் தேர்வு. அதிமுக கட்சி அமைப்பு தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 9 பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட இணைச்செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், பொருளாளர் என 9 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கான தேர்தல் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 



தேர்தல் பார்வையாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன், ஊட்டி மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் விருப்ப மனுக்களை வினியோகம் செய்தனர். இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தனது விருப்ப மனுவை வாங்கினார். அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியில் உள்ள அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இருந்தார் வந்த நிலையில், இன்று அதிமுக தலைமையிலிருந்து கழக அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது நெருங்கிய நண்பருமான ஆத்தூர் இளங்கோவன் போட்டியிட்ட நிலையில், இளங்கோவனை புறநகர் மாவட்ட செயலாளராக அதிமுக அறிவித்துள்ளது. இதன் மூலமாக 2011 ஆம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக புறநகர் மாவட்டம் செயலாளராக பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிசாமி வசனம் இருந்து இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இளங்கோவன் பதவி வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆத்தூர் இளங்கோவனை நியமித்துள்ளது சேலம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் இளங்கோவன் சேலம் புறநகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.



இதேபோல் சேலம் புறநகர் மாவட்ட கழக அவைத் தலைவராக அர்ச்சுணன், இணைச் செயலாளர் ஈஸ்வரிக்கும் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட துணை செயலாளராக முன்னாள் மேயர் சவுண்டப்பன் மற்றும் லட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவராக பன்னீர்செல்வம் , இணைச் செயலாளர் உமா ராஜ், துணை செயலாளராக தங்கமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.