அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 2000 பேருந்துகள், 4000 பேருந்துகள் வாங்குவதாக போக்குவரத்து அமைச்சர் கூறிக்கொண்டு உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான் வந்து கொண்டு உள்ளது. பேருந்துகள் வந்த மாதிரி தெரியவில்லை. இப்போது வாங்கும் பேருந்துங்கள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் போதும் சி.40 என்ற ஜெர்மன் அமைப்பின் மூலம் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் வட்டி இல்லா கடனாக 5,650 கோடி ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் இந்த அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதனையும் செயல்படுத்த வில்லை. இப்போது கேட்டால் அமைச்சர் கூறுகிறார். நேரு காலத்தில் வாங்கியதாக கூறுகிறார். அந்த வாகனங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டது. தற்போது அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்போது 38,000 பேரை நியமனம் செய்துவிட்டு சென்ற காரணம் மற்றும் கொரோனா காரணமாக கடந்த ஆட்சியில் ஆட்கள் எடுக்கவில்லை. கொரோனா காலத்திலும் கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு முழுசம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திமுக அரசு ஒரு ஆட்களை கூட பணி நியனம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினர். போக்குவரத்து கழகம் என்பது போக்கு இல்லா கழகமாக மாறிவிட்டது.அரசு பேருந்துகள் பாதி பேருந்துகள் ஓடவில்லை. மகளிருக்கு இலவசம் என்று கூறிவிட்டு பல்வேறு பிரச்சினைகள் தான் வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் மழை வந்தால் ஒழுகிறது. பராமரிப்பு இல்லாத துறையாக போக்குவரத்து துறை இன்றைக்கு மாறிவிட்டது. தனியார் மயமாக்குவதாக கூறுகின்றனர். ஓப்பந்தம் முறையில் ஆட்கள் எடுப்பதாக கூறுகின்றனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 3 வருடமாக உள்ளதை 4 வருடமாக மாற்றி விட்டனர். ஊதிய உயர்வு சம்பந்தமாக 5 சதவீதம் வாங்கி கொண்டு கூட்டணி கட்சிகள் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். இந்த ஆட்சியில் எந்த தவறு நடந்தாலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் பேசவில்லை, தொழிலாளர்களுக்காக பேசக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட வாய் திறக்காமல் இருக்கிறது எனவும் கூறினார். முன்னாள் நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பேசி உள்ளார். இதனால் இந்த ஆட்சியை போய்விடும் என்றார்.
இவரைத் தொடர்ந்து உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடியாரை பொறுத்தவரை அடிமட்ட மக்களுடைய எண்ணங்களை அறிந்து, அவர்களது எண்ணத்திற்கு கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நான்காண்டு கால ஆட்சியில் இது போன்ற ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது என்று மக்கள் விரும்பும் அளவிற்கு நல்லாட்சி கொடுத்த அற்புதமான மனிதருக்கு இன்று பிறந்தநாள் என்று வாழ்த்தினார். அதிமுக அரசு பொறுத்து வரை நான்கரை ஆண்டு காலத்தில் செய்யாத திட்டம் என்று எதுவும் இல்லை. அனைத்து துறைகளிலும் முதன்மையாக செயல்பட்டது என்றால் அதற்கு அன்று முதல்வராக எடப்பாடியார் தான் காரணம். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1500 ஏக்கரில் உருவாக்கப்பட்டு இன்று நமது மேலை நாடுகளுக்கு இணையான கட்டிடங்களை உருவாக்கியதற்கு காரணம் நமது கழகத்தின் பொதுச்செயலாளர் தான் என்று கூறினார். இன்னும் பல்வேறு பணிகளை செய்வதற்காக கடவுள் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். எங்களைப் பொறுத்தவரை கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்று கலகம் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்களது பணியை பொறுத்தவரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். மற்றவர்கள், இயக்கத்தில் இருந்து நீக்கியவர்களை பற்றி கருத்து கூற முடியாது என்று கூறினார். அமைச்சரவை மாற்றம் என்பது அவர்களது விருப்பம். அதில் நாங்கள் தலையிட முடியாது. எங்களைப் பொறுத்தவரை எங்களது இயக்கம் மக்களுக்கான இயக்கம் மக்களுக்கு என்றும் நல்லது செய்ய செய்யக்கூடிய இயக்கம். அம்மா எங்களை அப்படித்தான் உருவாக்கி இருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரை ஏழை எளிய மக்களுக்கான உருவாக்கப்பட்ட இயக்கம் என்றார்.