சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் ரஞ்சித், உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கிச்சிப்பாளையம் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சௌடேஸ்வரன், துவேஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சேலம் மல்லூர் அருகே உள்ள தனியார் தீம் பார்க்கில் மகன்களின் பள்ளி விடுமுறை கொண்டாடத்திற்காக சென்றுள்ளனர். அப்போது தம்பதியினரின் மூத்தமகன் சௌடேஸ்வரன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். 

Continues below advertisement

உடனடியாக சௌடேஸ்வரனை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீம் பார்கில் தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தபோது பாதுகாவலர்கள் இருந்தார்களா? பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக தீம் பார்க் சென்ற குடும்பத்தினருக்கு சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண