சேலம் எடப்பாடி வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, அதிமுகவிடம் கூட்டணி பலமில்லை; பிரதமர் வேட்பாளர் முன்னிறுத்தவில்லை இருப்பினும் அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழக முதல்வருக்கு கணக்கு தெரியுமோ? தெரியாதா? என்று தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததாக முதல்வர் பேசியுள்ளார். எந்த கணக்கின் அடிப்படையில் பேசி உள்ளார் என்று தெரியவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளது. தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மட்டுமே கூட்டணியில் அங்கம் வகித்தது. கூடுதலாக வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகள் சரிந்ததாக முதல்வர் கூறியிருந்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக 3 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது.நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் முப்பதாயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது. அப்படி என்றால் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. திமுகவின் செல்வாக்கு மக்களுடைய குறைந்துள்ளது. தெரியவில்லை என்றால் கொள்ளுங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே. நாமக்கலில் ஏழு சதவீதம் வாக்கு சதவீதம் திமுக வெற்றி குறைந்துள்ளது என்றும் பேசினார். திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி மட்டுமே நம்பி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.அவர் செய்த சாதனை சொல்லியும், கட்சி நம்பியும் தேர்தலில் நிற்கவில்லை. எங்கப்பன் குதிற்குள் இல்லை என்று கூறுவது போன்று உங்கள் கட்சி கருத்து வேறுபாடு, பிரச்சனை இல்லை என்று முதல்வர் கூறி வருகிறார். உங்கள் கட்சியில் பிரச்சனைகள் குறித்து நாங்கள் பேசவில்லை முதல்வரே பேசுகிறார்.



அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி.  திமுக தலைமையில் ஒரு கூட்டணி. அதிமுக தலைமையில் கூட்டணியில் 75 இடங்களில் வெற்றி பெற்றோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையே மூன்று சதவீத வாக்கு சதவீதம் மட்டுமே. திமுக ஆட்சி அமைந்த 41 மாத கால ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. திமுக கொண்டுவரப்பட்ட திட்டத்தில் மக்கள் எந்த பயனும் பெறவில்லை. எந்தத் துறையில் எடுத்தாலும் ஊழல். அனைத்து துறைகளிலும் லஞ்சம், லாவணயம் அதிகம். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணிகள் நடைபெறும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதலிடம் என்றும் விமர்சனம் செய்தார்.


திமுக தலைவர் ஸ்டாலின் நீங்கள் சொன்னபடி நான் சொல்லும் ஜோசியம் பழிக்கும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். திமுக கார்ப்பரேட் கம்பெனி திமுக தலைவர் ஸ்டாலின் சேர்மன், உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் இயக்குனராக உள்ளனர். தமிழகத்தில் மன்னராட்சி முறை கொண்டுவர பார்க்கிறார்கள். கருணாநிதி மன்னராக இருந்தபோது அவரது மகன் ஸ்டாலினுக்கு முடி சூட்டப்பட்டது; கருணாநிதி மறைவிற்குப் பிறகு முதல்வராக ஸ்டாலின் ஆகியுள்ளார். ஸ்டாலின் மன்னராக இருக்கும் நிலையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளவரசராக உள்ளார். இவருக்கு முடிசூட்ட முதல்வர் துடிக்கிறார். வாரிசு அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இருக்கும் என்றார். முதல்வர் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியது மட்டுமே. திமுக அமைச்சர் ஒருவர் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமையில்லை என்று கூறினார். ஆளுமை இருந்ததால்தான் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி புரிந்தேன். அதிமுக ஆட்சியை கலைக்க எத்தனை சதித்திட்டங்கள் தீட்டப்பட்டது. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு அதிமுக சிறப்பான ஆட்சி கொடுத்தது எனவும் பேசினார்.


அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று பச்சை பொய்யை திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். அதிமுக சிறந்த ஆட்சியை செய்தது என்று மத்திய அரசிடம் இருந்துபெற்ற விருதுகளே சான்று. மேலும் அதிமுக ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம். ஏழை குடும்பத்தை சேர்ந்த நான்கு லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஏழை, எளிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசமாக மடிக்கணினி திட்டம் உள்ளிட்டவைகள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.


திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, ஊர்ஊராக சென்று ஒரு பெட்டியை வைத்து உங்கள் ஊரில் உள்ள பிரச்சனையை லெட்டரில் எழுதி பெட்டியில் போடுங்கள் என்றும், நீங்கள் கொடுத்த மனுவிற்கு ஆட்சிக்கு வந்த பிறகு தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழக முழுவதும் ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து மனுக்களை பெற்றார்கள்.இவை அனைத்தும் ஏமாற்று வேலை..கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவார்கள் தேர்தல் முடிந்த பிறகு மறந்து விடுவார்கள். கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர் எனவும் கூறினார்.


சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை பொருத்தவரை கூட்டணி இருப்பது உறுதி. பலமான கூட்டணி அமையும். சட்டமன்றத் தேர்தல் வேறு. நாடாளுமன்றத் தேர்தல் வேறு. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகின்ற கூட்டணியாக அமைப்போம் எனவும் தெரிவித்தார். பேருந்தை நம்பி மக்கள் யாரும் ஏறமுடிவதில்லை. தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகள் பெரும்பாலும் கண்டமான பேருந்துகள். பெண்கள் இலவசமாக நகர பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்புதான். மக்கள் நலத்திட்டம் இல்லை. மாதமாதம் கடனை வாங்கிதான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார் முதல்வர். இந்த கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள் என்றும் கூறினார்.



சேலத்தில் ஒருவரை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ளனர். அவரோ தமிழ்நாட்டுக்கே அமைச்சர் என்று தெரியாமல் சேலத்தை மட்டுமே சுற்றி சுற்றி வருகிறார். இத்தனை நாட்கள் கும்பகர்ணன் போல தூங்கிவிட்டு தற்போது தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவதாக நாடகத்தை அறங்கேற்றி வருகிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன். அத்தனையும் வெளிவேசம் என்று விமர்சனம் செய்தார்.


திமுக ஆட்சிக்கு வந்து 41 மாதத்தில் கிலோக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.64 சதவீதம் மின்சாரம் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்தி விட்டார்கள். ஆனால் திட்டம்தான் வரவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஒரு ஆண்டில் முடிய வேண்டிய பணியை 41 ஆண்டுகளாகியும் முடிக்கவில்லை. இது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். இந்த திட்டத்தை திமுக அரசு கொண்டுவந்ததாக வேட்டி மாற்றி கட்டிய அமைச்சர் ஒருவர் சொல்கிறார். இது பச்சைபொய். இந்த திட்டத்தை யார் கொண்டுவந்தது என்று மக்களுக்கு தெரியும். பொய் சொல்லியே பிழைப்பு நடத்துவதே திமுகவின் வழக்கம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முறைகேடாக ஏரிகளில் மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.