தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக தருமபுரி மாவட்ட சார்ந்த கல்வராயன் மலை அடிவார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள காட்டாற்றில் நேற்று இரவு பெய்த மழையில் வெள்ளம் ஏற்பட்டது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தில் கோட்டப்பட்டி அடுத்த தாதன்கொட்டாய் கிராமத்தில் ஆற்றோரத்தில் பாபோஜி ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து தாதர் கொட்டாயிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குழுமிநத்தம் பகுதியில் இந்த கார் சிதிலமடைந்த நிலையில் கரை ஒதுக்கியது. மேலும் கார் முழுவதுமாக, பாறைகளில் அடித்து நொறுங்கிய நிலையிலும், கார் முழுவதுமாக மணல் தேங்கியும் கிடக்கிறது. இதனைத் தொடர்ந்து நான்கு கிலோ மீட்டர் அப்பால் கரை ஒதுங்கிய காரை, காரின் உரிமையாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தற்பொழுது இந்தக் காரின் பாகங்கள் ஒன்று கூட பயன்படாத வகையிலும், உதிரி பாகங்கள் பொருத்தினால் கூட காரை சரி செய்ய முடியாத நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி ரவுண்டானாவில் திடீரென மயங்கி விழுந்து மதுபான கடை ஊழியா்- தவறவிட்ட ரூ.1. இலட்சம் பணத்தை மீட்டு ஒப்படைத்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்.
தருமபுரி அடுத்த கௌகத்தூர் அரசு மதுபான கடை உள்ளது. இதில் ஒரு மேலாளா் இரண்டு விற்பனையாளா்கள் உள்ளனர். இந்நிலையில் மதுபான கடையில் விற்பனையான பணம் ரூ.1.19 இலட்சத்தை கடையின் ஊழியா் ராமசஞ்சீவன் என்பவா் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்றுள்ளாா். அப்பொழுது தருமபுாி நான்கு ரோடு ரவுண்டானா அருகே செல்லும்போது, அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்து, தீடிரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான்குரோடு அருகே உட்கார்ந்துள்ளார். அப்பொழுது அவருக்கே தொியமால் மயக்கம் அடைந்து விழுந்துள்ளாா். இதனையறிந்த அப்பகுதியில் உள்ள மக்கள், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சின்னசாமியிடம், ஒருவா் மயங்கி உள்ளதாக தொிவித்துள்ளனா்.
இதனை தொடர்ந்து வந்த உதவி ஆய்வாளர் சின்னசாமி, மயக்கமடைந்தவருக்கு காவலரின் முதலிதவி வழங்கி, ஆட்டோ மூலம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மதுக்கடுஊழியர் சஞ்சீவன் வந்த இருசக்கர வாகனத்தில், பையில் பணம் இருந்துள்ளது. அதனை போக்குவரத்து காவலா் பத்திரமாக எடுத்து வைத்துள்ளாா். தொடர்ந்து சுமாா் அரை மணி நேரம் கழித்து அங்கு வந்த ஊழியா், தான் பணம் எடுத்து வந்ததாகவும், வண்டியில் பணம் இல்லையென உதவி காவல் ஆய்வாளர் சின்னசாமியிடம் கூறியுள்ளார். அப்பொழுது அந்த பணத்தை, நான் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், பணத்தை எடுத்து வரும்போது, அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், ஒருவராக வராமல், இரண்டு பேராக செல்லவும். மேலும் உடல்நிலை சரியில்லாத போது, துணைக்கு ஓருவரு அழைத்து சென்று பாதுகாப்பாக செல்லுங்கள் என அறிவுரை வழங்கி, விற்பனை பணம் ரூ.1.19 இலட்சத்தை அவரிடம் ஒப்படைத்தார். அவரை அனுப்பி வைத்தாா். தொடர்ந்தை பணத்தை பெற்றுக் கொண்ட ஊழியர் உதவி காவல் ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் திடீரென மயங்கி விழுந்த ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, அவரது பணம் ரூ.1.19 இலட்சத்தை பாதுகாப்பாக மீட்டு கொடுத்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சின்னசாமியின் பணியையும், நேர்மையும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.