தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் சாலையில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.  இந்த மீன் மார்க்கெட்டில் பழைய மீன்கள், ஐஸ் பெட்டியில் வைத்தும், அரசால் தடை செய்யப்பட்ட மீன் வகைகள், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பென்னாகரம் மீன் மார்க்கெட்டில், மீன் வளத்துறை, உணவு பாதுகாப்பு துறையினர்  திடீரென ஆறாவது செய்தனர். அப்பொழுது கடைகளில், விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகிய நிலையில் உள்ளதா? தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா?  சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். 

 



 

மேலும் அனைத்து கடை உரிமையாளர்களிடம் கடை வைப்பதற்கான உரிமம் பெறவும் , விற்பனையாளர்கள் உடல் தகுதி, மருத்துவ சான்று உள்ளிட்டவற்றை முறையாக பெற வேண்டும் எனவும், பொது மக்களுக்கு புதிய மீன்களை சுகாதாரமான முறையில் வைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மீன் வளத் துறையினர் அறிவுறுத்தினர். இதில் மீன்வள ஆய்வாளர் வேலுசாமி உள்ளிட்ட மீன் வளத் துறையினர்  ஆய்வு செய்தனர்.

 



 

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மயான வசதி வேண்டி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்.

 



 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டி, மஞ்சவாடி ஊராட்சிகளில் நொனங்கனூர், ஆலமரத்தூர் கிராம மக்கள் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் மயானம் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.‌ இதனால்  மயானத்துக்கு செல்ல முடியாமல் மலை கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
  

 



 

 இதனால் மயான ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, மயானத்திற்கு பாதை வசதி செய்ய வேண்டி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் நொனங்னூர் மலைவாழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு அளவீடு செய்து கொடுக்க வேண்டும். சமீபத்தில் இக் கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யச் சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்த நபர் சுடுகாட்டுப் பாதையில் வழிவிடாமல் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். ஆகவே ,30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தும் மயானத்தை கிராம மக்கள் எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் சுப்பிரமணியிடம், மலைவாழ் மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.  இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும், முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினரும் டில்லி பாபு, விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி, மாநில பொருளாளர் பொன்னுசாமி , மாவட்டச் செயலாளர் மல்லையன், வட்டத் தலைவர் தீர்த்தகிரி, வட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாநில உதவி செயலாளர் கண்ணகி, வட்டச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.